மணிகண்டனுக்காக நடிகர் விஜய் சேதுபதி செய்த விஷயங்கள் இவ்வளோவா? நீங்க தெய்வம் சார்..

Manikandan: நடிகர் மணிகண்டன் தன்னுடைய நடிப்பில் வெற்றி பெற்று வரும் நிலையில், தன்னுடைய சக நடிகரான விஜய் சேதுபதி செய்த உதவிகள் குறித்து ஓபனாக சொல்லி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பிட்சா இரண்டாம் பாகம் ரைட்டராக அறிமுகமாகியவர். காதலும் கடந்து போகும் படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார். அப்படத்தில் அவருக்கு விஜய் சேதுபதியுடன் நல்ல நட்பு உருவானதாம். அதை தொடர்ந்து விக்ரம் வேதா திரைப்படத்துக்கு வசனம் எழுதினார்.
பாவ கதைகள், நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தாலும் ஜெய் பீம் திரைப்படத்தில் தான் அதிக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தொடர்ச்சியாக, வெற்றி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது குடும்பஸ்தன் படத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகராக மட்டுமல்லா டப்பிங் வேலைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். விவேக், மனோபாலா, விஜய் சேதுபதிக்கு நிறைய படங்களில் டப்பிங் பேசி வருகிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் ஏழுக்கும் அதிகமான படங்களில் சென்சாரில் மிஸ்ஸாகும் வசனங்களுக்கு மணிகண்டன் தான் டப்பிங் பேசி இருக்கிறார். இதனால் மணிகண்டனுக்கும், விஜய் சேதுபதிக்கும் நல்ல நெருக்கம் இருக்கிறதாம்.
முதல்முறையாக காதலும் கடந்து போகும் படத்தில் தான் விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டனுக்கு நட்பு உருவானதாம். அங்கு பேச தொடங்கியவர்கள் நிறைய தங்களுக்கு இருக்கும் விஷயங்கள் குறித்து பேசி இருக்கின்றனர். அதற்கடுத்த நாளில் மணிகண்டனின் தங்கைக்கு ஆபரேஷன் நடந்ததாம்.
அப்போ கால் செய்த விஜய் சேதுபதி எங்க இருக்க எனக் கேட்டு நேரடியாக பார்த்து தேவையான காசை கொடுத்து விட்டு சென்றாராம். அடுத்து மணிகண்டனின் தங்கை கல்யாணத்துக்கு பத்திரிக்கை கூட கொடுக்காமல் நடக்கும் விஷயத்தை மட்டும் சொல்லி இருக்கிறார்.
கல்யாண நாளில் கால் செய்த விஜய் சேதுபதி நேரடியாக வந்து வாழ்த்திவிட்டு பெற்றோரை பார்த்தும் பெருமையாக பேசினாராம். பின்னர் வெளியில் வந்து 3 லட்சம் காசை மணிகண்டனிடம் திணித்து விட்டு சென்றாராம். அந்த காசுதான் கல்யாண செலவை கொடுக்க உதவியாக இருந்ததாம். தற்போது மணிகண்டன் இதை சொல்ல விஜய் சேதுபதி குறித்து ரசிகர்கள் பெருமையாக பேசி வருகின்றனர்.