அந்த படத்தை நீ எதுக்கு பார்த்த? எப்படி பார்த்த?.. லவ்வர் பட நடிகரை திட்டிய ஷங்கர்!..

by Ramya |
manikandan
X

Director Shankar: தமிழ் சினிமாவில் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசத்தை காட்டி, பிரம்மாண்டத்தை காட்டி புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் ஷங்கர். ஆனால் தற்போது தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றார். ஜென்டில்மேன் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கிய ஷங்கருக்கு முதல் திரைப்படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

அதனை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டிலும் பிளாக்பஸ்டர் திரைப்படங்களாகவும் அமைந்தது. கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகமான இந்தியன் 2 திரைப்படத்தை எடுத்து மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தார் ஷங்கர். அதுவரை அவர் இயக்கிய எந்த திரைப்படங்களும் தோல்வியை சந்தித்தது கிடையாது.


இந்தியன் 2 திரைப்படத்தின் மூலமாக கடுமையான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் சந்தித்து வந்தார். இருப்பினும் தன்னுடைய அடுத்த திரைப்படமான கேம் சேஞ்சர் திரைப்படத்தின் மூலமாக நிச்சயம் கம்பேக் கொடுத்து விடலாம் என்கின்ற நம்பிக்கையில் இருந்தார் ஷங்கர். ஆனால் அந்த திரைப்படமும் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தது.

படம் 450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் மொத்தமாகவே 200 கோடியை கூட தொடவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த திரைப்படமும் இயக்குனர் ஷங்கருக்கு தோல்வி படமாக அமைந்ததால் மிகப்பெரிய அப்செட்டில் இருந்து வருகின்றார். அடுத்ததாக இந்தியன் 3 திரைப்படத்தின் வேலைகளை தொடங்க இருப்பதாக சமீபத்திய பேட்டிகளில் தெரிவித்து இருக்கின்றார்.

இந்நிலையில் ஷங்கர் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் மணிகண்டனை திட்டி இருக்கின்றார். அதனை நடிகர் மணிகண்டன் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். அதாவது நடிகர் மணிகண்டன் தற்போது குடும்பஸ்தன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற ஜனவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.

படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தின் புரமோஷனுக்காக தொடர்ந்து youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார் மணிகண்டன். அதில் தனது பள்ளி பருவத்தில் இயக்குனர் சங்கரிடம் திட்டு வாங்கியது குறித்து பகிர்ந்திருந்தார். அவர் 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அவர் இருந்த ஏரியாவில் அந்நியன் திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது சங்கர் சார் நிற்பதை பார்த்த மணிகண்டன் தனது நோட்டை எடுத்துக் கொண்டு சென்று சங்கர் சாரிடம் ஆட்டோகிராப் கேட்டிருக்கின்றார். பின்னர் மணிகண்டனிடம் இருந்து பேனாவை வாங்கி ஆட்டோகிராப் போடப் போகும்போது மணிகண்டன் நான் நீங்கள் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தை 5 ,6 முறை பார்த்திருக்கிறேன் என்று கூறினாராம்.


உடனே சங்கர் சார் பாய்ஸ் படத்தை 5 முறை நீ பார்த்தாயா? அந்தப் படத்தை நீ எதற்காக பார்த்தாய்? எப்படி பார்த்தாய்? என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார். அதற்கு சிடியில் பார்த்தேன் என்று கூறியதும் கோபப்பட்டு உனக்கு ஆட்டோகிராப் கிடையாது என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு எப்படியோ ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டு அங்கிருந்து வந்துவிட்டதாக அவர் அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார். மேலும் அந்த சம்பவத்துடன் சங்கர் சார் என்னை வைத்து படம் இயக்குவேன் என்று சமீபத்தில் கூறியிருந்ததையும் பெருமையுடன் பகிர்ந்திருந்தார் மணிகண்டன்.

Next Story