ரஜினி கமல் கூட செய்யலயே! இதான் தமிழ் சினிமா.. டோலிவுட் அப்படி இல்ல! புலம்பும் மணிரத்னம்

by rohini |
mani
X

mani

தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் மணிரத்னம். பாரதிராஜா தான் தமிழ் சினிமாவில் காதல் படங்கள் எடுப்பதில் வல்லவர் என நினைத்திருந்த போது பகல் நிலவு என்ற படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக கால் பதித்தவர் மணிரத்தினம்.

இந்த படமும் ஒரு காதல் படம் தான் .படத்தின் கதைப்படி வழி தவறி தவறான பாதைக்கு செல்லும் ஹீரோவை தன்னுடைய காதலின் மூலம் சரியான பாதைக்கு கொண்டு செல்பவர் ஹீரோயின். அந்த காலத்தில் ரௌடியாக இருப்பவர்களை காதலிப்பது போன்ற கதாபாத்திரம் அமைக்க இயக்குனர்கள் தயங்கிய போது அந்த கோணத்திலும் கதையை எடுத்து ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியவர் மணிரத்தினம்.

தற்போது வரை காதல் படங்கள் என்றாலே மணிரத்தினம் தான் என அனைவரும் கூறி வருகிறார்கள். இதற்கு சரியான உதாரணமாக மௌன ராகம் திரைப்படத்தை கூறலாம். முக்கோண காதல் கதையாக அமைந்த இந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

காலத்தால் அழியாத வகையில் மௌன ராகம் திரைப்படம் அமைந்தது. அதன் பிறகு மதப் பிரச்சினை என்பதை அடிப்படையாகக் கொண்டு பம்பாய் என்ற திரைப்படத்தை எடுத்தார். மதம் என்பது மனிதர்களுக்கு தான் தெரியும். காதலுக்கு தெரியாது என்பதை உணர்வுபூர்வமாக பம்பாய் திரைப்படத்தின் மூலம் உணர்த்தியவர் மணிரத்தினம்.

அதன் பிறகு அலைபாயுதே திரைப்படம் இளசுகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திருமணம் என்றாலே ஒரு கலாச்சாரத்தை பின்பற்றுவதாகவே இருக்கும். ஆனால் அலைபாயுதே திரைப்படத்தில் காதலுக்கு எந்த கலாச்சாரமும் கிடையாது .இரு மனங்களின் புரிதல் இருந்தால் மட்டும் போதும் என்பதை உணர்த்தவே இந்த அலைபாயுதே திரைப்படம் அமைந்தது.

இப்படி காதலின் ஆழத்தை தன் படங்களின் மூலம் தத்துரூபமாக காட்டியவர் மணிரத்தினம். காதல் படங்களை மட்டும் தான் எடுக்க முடியுமா? கமர்ஷியலான படங்களையும் கொடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாக அமைந்தது தளபதி.

ரஜினி மம்முட்டி ஷோபனா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரஜினியின் சினிமா கெரியரில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அதைப்போல கமலை வைத்து நாயகன் என்ற படத்தையும் உருவாக்கினார். இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்பேர்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரியும்.

இந்த படத்திற்காக தேசிய விருதும் வழங்கப்பட்டது. நான்கு விருதுகளை இந்த படம் தட்டிச் சென்றது. இந்த நிலையில் மணிரத்தினம் தமிழ் சினிமாவைப் பற்றி புலம்பிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது பொன்னியின் செல்வன் படத்திற்காக மணிரத்தினம் சிறந்த இயக்குனர் என்ற பிரிவில் தேசிய விருதை பெற்றார்.

ஆனால் அவரை வாழ்த்தி எந்த ஒரு பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து செய்தியை பகிரவில்லை. ஏன் ரஜினி கமல் கூட ட்விட்டர் பக்கத்தில் ஒரு வாழ்த்துக் கூட தெரிவிக்க வில்லையாம். இதைப்பற்றி மணிரத்தினம் நெருங்கிய ஒருவரிடம் ‘ஆந்திராவில் இப்படி கிடையாது. ஆந்திராவில் ஒரு பிரபலம் தேசிய விருது பெற்றால் ஒட்டுமொத்த பிரபலங்களும் அவரை போய் வாழ்த்தி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் தமிழ் சினிமா அப்படி இல்லை’ என்பது போல மணிரத்தினம் கூறி இருக்கிறாராம்.

Next Story