ரோஜா முதல் தக் லைஃப் வரை.. மணிரத்னத்திடம் மாறாத ஒரு விஷயம்.. நோட் பண்ணீங்களா?

by ROHINI |
roja
X

roja

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் படைப்புகளை பிரம்மாண்டமாக தரக்கூடியவர். அதே வகையில் மணிரத்னம் தன்னுடைய படைப்பை வித்தியாசமான முறையில் எக்காலத்துக்கும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் தந்து கொண்டிருப்பவர். கன்னடத்தில் பல்லவி அனு பல்லவி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மணிரத்னம் அதன் பிறகு தமிழில் பகல் நிலவு என்ற படத்தை இயக்கினார். அதிலிருந்து தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

இயக்குனர்களை பொறுத்த வரைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான விஷயம் என ஒன்று இருக்கும். அந்த வகையில் மணிரத்னம் படங்களில் அப்போதிலிருந்து இப்போது வரை மாறாத ஒரு விஷயம் என்னவெனில் அது திருமணம் சம்பந்தப்பட்ட பாடல். அவருடைய எல்லா படங்களையும் எடுத்துக் கொண்டால் திருமணம் குறித்து ஒரு பாடல் அமைந்திருக்கும். அதுவும் மற்ற பாடல்களை விட அந்த திருமண பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கும். அந்த வகையில் அவருடைய இயக்கத்தில் இப்போதும் ஒரு ட்ரெண்ட் செட்டராக மாறி இருப்பது ரோஜா திரைப்படம் .

அதில் அரவிந்த்சாமி மற்றும் மதுபாலா திருமணத்தின் போது பின்னணியில் ஒலிக்கக்கூடிய ருக்குமணி ருக்குமணி என்ற பாடல் பெரிய அளவில் ஹிட்டான ஒரு பாடலாகும் .அதன் பிறகு பாம்பே படத்தில் மனிஷா கொய்ராலா பாடுவது மாதிரி கண்ணாலனே பாடல் எல்லோருக்கும் ஒரு பிடித்தமான பாடலாக அமைந்தது. அடுத்து மோகன்லால் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான இருவர் திரைப்படத்திலும் திருமண சமயத்தின் போது ஒலிக்க கூடிய நறுமுகையே பாடலும் பெரிய அளவில் ஹிட்டான பாடலாக மாறியது.

ஷாருக்கான் வைத்து அவர் இயக்கிய உயிரே திரைப்படத்தில் ப்ரீத்தி ஜிந்தா பாடும் நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடல் எந்த மாதிரி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என அனைவருக்குமே தெரியும். இதில் அலைபாயுதே படத்தில் மாதவனும் ஷாலினியும் வீட்டுக்கு தெரியாமல் கோயிலில் திருமணம் செய்யும் போது ஒலிக்க கூடிய மாங்கல்யம் தந்துநானே பாடல் இன்றுவரை அனைவரும் திருமண நாளிலும் ஸ்டேட்டஸ் ஆக வைக்கக்கூடிய பாடலாகவே மாறி இருக்கிறது.

அதே படத்தில் அமைந்த யாரோ யாரோடி பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த லிஸ்டில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலும் மாதவன் சிம்ரன் திருமணம் செய்யும் போது ஒலிக்க கூடிய எந்த வாசல் வழி பாடலும் அனைவருக்கும் பிடித்த பாடலாக மாறியது .

mani

mani

இப்படி ராவணன் திரைப்படத்தில் பிரியாமணி திருமணம் நடக்கும்போது ஒலிக்க கூடிய பாடல் ,ஓகே கண்மணி படத்தில் நித்யா மேனனும் துல்கர் சல்மானும் திருமணம் செய்யும்போது ஒலிக்க கூடிய மனமன பாடல் காற்று வெளியிடை திரைப்படத்தில் அமைந்த புதுப்பொண்ணே பாடல் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் அமைந்த கீச் கீச் பாடல் என வரிசையாக திருமண பாடலுக்கு என முக்கியத்துவம் கொடுக்க வந்த மணிரத்தினம் இப்போது வெளியாக கூடிய தக் லைப் திரைப்படத்திலும் ஜிங்குச்சா பாடலையும் வைத்து அதையும் பெரிய அளவில் ஹிட்டாக்கி விட்டார்.

Next Story