இளையராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் என்ன வித்தியாசம்?!.. மணிரத்னம் சொன்னது இதுதான்!..
தமிழ் சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியிலும் இசைஞானியாக வலம் வருபவர் இளையராஜா. 80களில் தமிழ் சினிமாவை ஆண்டவர் இவர். இவரை நம்பியே பல படங்களும் உருவானது. முன்னணி இயக்குனர்கள் மட்டுமில்லாமால் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களும் இளையராஜாவின் இசையையே நம்பி இருந்தனர்.
ஆனால், புதிய விஷயங்கள் எப்போதும் எல்லா துறையிலும் நடக்கும். 90களில் பல புதிய இசையமைப்பாளர்கள் வந்தார்கள். அதில், ஏ.ஆர்.ரஹ்மான் முக்கியமானவர். மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம்தான் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். குறிப்பாக ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பாடியது. இளையராஜா மண் வாசனை மிக்க பாடல்கள் எனில் ரஹ்மானோ இளசுகளை கட்டிப்போடும் வெஸ்டர்ன் இசையை கொடுத்தார்.
முதல் படமான ரோஜா படத்திலேயே தேசிய விருது வாங்கினார் ரஹ்மான். அதன்பின் இப்போது வரை ரஹ்மானை விட்டு போகவில்லை மணிரத்னம். கடந்த 30 வருடங்களுக்கும் மேல் மணிரத்னத்தின் எல்லா படங்களுக்கும் இசை ரஹ்மான்தான். அதேநேரம், மணிரத்னம் இயக்கிய இதயக்கோவில், மௌன ராகம், தளபதி, அஞ்சலி போன்ற படங்களுக்கு அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தார் இளையராஜா.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் இளையராஜாவுக்கும், ரஹ்மானுக்கும் என்ன வித்தியாசம் என்கிற கேள்விக்கு பதில் சொன்ன மணிரத்னம் ‘ ராஜாவிடம் எப்போதும் புதியாக ஒன்றை பெறலாம். நிறைய கற்றுக்கொள்ளலாம். ஒரு பாடல் எப்படி வரவேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். படத்தின் துவக்கம் முதல் இறுதிவரை ஒரு மேஜிக் செய்வார்’
இளையராஜாவின் குழுயில் புரோகிராமராக இருந்தவர்தான் ரஹ்மான். நன்றாக ஜிங்கிள்ஸ் செய்வார். கமர்சியல் படங்களுக்கும் இசையமைப்பார் என சொன்னார்கள். மௌனராகம் படத்திலும் ரஹ்மான் வேலை செய்திருக்கிறார். அவர் இசையமைப்பாளராக மாறிய பின் அவர் என்னை ஏமாற்றியதே இல்லை. மிகவும் டீட்டெய்லாக வேலை செய்வார்’ என மணிரத்னம் பேசியிருக்கிறார்.