அஜித் படத்துக்கெல்லாம் இது போதும்… தளபதி இயக்குனரால் டிரெண்டாகும் வீடியோ!

Ajith: தமிழ் சினிமாவின் இரண்டு துருவங்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் படங்களில் நடக்கும் சுவாரசிய தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது வைரல் ஆவது வழக்கம். ஆனால் சில விஷயங்கள் எதேர்ச்சையாக சொல்லப்பட்டு ரசிகர்களிடம் அதிருப்தியை கூட உருவாக்கிவிடும்.

தற்போது விஜய் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருந்து இரண்டு வருடம் பிரேக் எடுக்க இருக்கிறார். அவரின் கடைசி படமாக தளபதி69 உருவாக இருக்கிறது. இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்க இருக்கிறார். இப்படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் மஞ்சு வாரியர் நடிப்பதாக கூறப்படுகிறது. இதுபோலவே கடந்தாண்டு வெளியான அஜித்தின் துணிவு படத்தை ஹெச்.வினோத் இயக்கி இருந்தார். அப்படத்திலும் முக்கியமான ரோலில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

தற்போது இங்கு தான் சிக்கல் பிறந்து இருக்கிறது. மஞ்சு வாரியர் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் துணிவு படம் நடிக்கும் போது எனக்கு நிறைய சுதந்திரங்களை ஹெச் வினோத் கொடுத்திருந்தார். நாமே ஒரு காட்சிக்கு அதிகமாக தேவைப்படும் என நினைத்தாலும் அவர் அந்த காட்சிக்கு அது போதும் என மறுத்துவிடுவார்.

இருந்தும் துணிவு படத்தில் இந்த காட்சி சரி இல்லையே எனக் கேட்டு இருக்கிறேன். அதற்கு கவலைப்படாதீங்க மேம் நீங்க நல்லா நடிக்கிறதுக்கு இன்னொரு படம் தரேன் என அவர் கூறியதாக தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

தற்போது இந்த வீடியோவை வைரலாகி இருக்கும் விஜய் ரசிகர்கள் அஜித்தை கலாய்த்து வருகின்றனர். அந்த இன்னொரு படம் தளபதி 69 தானே எனக் நகைச்சுவையாக தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it