மனோபாலா கடைசியாக சொன்ன அந்த வார்த்தை... இயக்குனர் சுந்தர்.சி. நெகிழ்ச்சி

by Sankaran |
manobala, sundar c
X

காமெடி நடிகர்களில் மனோபாலாவின் நடிப்பு அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும். ஒரு அப்பாவித்தனம், ஆச்சரியம் கலந்து அவரது எக்ஸ்பிரஷன் இருக்கும். அது மட்டும் அல்லாமல் அவரது நகைச்சுவை மற்ற நடிகர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இது அவருக்கு மட்டுமே உரிய ஸ்டைல்.

மதகஜராஜா: அந்த வகையில் 12 வருஷம் கழித்து இப்போது வந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் மதகஜராஜாவிலும் அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

சுந்தர்.சியிடம் சொன்னது: அவர் படத்தில் மொத்தம் 15 நிமிடங்களே வந்தாலும் வரும் நேரம் எல்லாம் கலகலப்புதான். சுந்தர்.சியிடம் இந்தப் படம் குறித்து என்ன சொன்னார் தெரியுமா? இந்தப் படம் மட்டும் வந்தால் நான் வேற லெவலுக்குப் போயிடுவேன் என்றாராம்.

மருத்துவமனையில் மனோபாலா: அரண்மனை 4ல் இவருக்காகவே சில காட்சிகளை தயார் செய்து வைத்திருந்தாராம் சுந்தர்.சி. ஆனால் அப்போது மனோபாலா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதன்காரணமாக அவரே சுந்தர்.சி.க்கு போன் பண்ணி 'சாரிடா... என்னை மன்னிச்சுக்க என்னால இந்தப் படத்துல நடிக்க முடியாது.

கடைசி வார்த்தை: வேற நடிகரைப் போட்டுக்க'ன்னு சொல்லி ஆஸ்பத்திரியில இருக்குற போட்டோவையும் அனுப்பினாராம். 'அதுக்கென்ன இந்த ஒரு படம்தானே... பரவாயில்லை. அடுத்த படத்துல பார்த்துக்கலாம்'னு சுந்தர்.சி. சொன்னாராம்.

'இல்லடா நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்'னும் சொல்லி சுந்தர்.சி.யை கண்கலங்கச் செய்துவிட்டாராம் மனோபாலா. மனோபாலாவும், சுந்தர்.சி.யும் வாடா போடா என்று அழைக்கும் வகையில் நெருக்கமானவர்களாம்.

கமலுடன் நெருக்கம்: நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர். 175 படங்கள் வரை நடித்துள்ளார். 40 படங்களை இயக்கியுள்ளார். இவர் திரைப்படத்துறையில் கமலுடன் மிகவும் நெருக்கமானவர். இவரது வளர்ச்சியில் பெரிய பங்கு கமலுக்கு உண்டு.


இயக்கிய படங்கள்: அதேபோல பாரதிராஜாவுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் இயக்கத்தில் பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளன. குறிப்பாக ஆகாய கங்கை, பிள்ளை நிலா, ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், மல்லு வேட்டி மைனர், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், மூடுமந்திரம், சிறைப்பறவை ஆகிய படங்களைச் சொல்லலாம்.

வேட்டைக்காரன், சிங்கம், சிறுத்தை, திண்டுக்கல் சாரதி, காஞ்சனா, நண்பன், சகுனி, துப்பாக்கி ஆகிய படங்களில் இவரது நடிப்பு அசத்தலாக இருக்கும்.

Next Story