1. Home
  2. Cinema News

மனோரமாவின் மகனும் நடிகருமான பூபதி காலமானார்!.. ரசிகர்கள் இரங்கல்!...

bhoopathy

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகையாக கலக்கியவர் மனோரமா. இவரை எல்லோரும் ஆச்சி என அழைத்தார்கள். கருப்பு வெள்ளை காலத்தில் இருந்து கலர் படம் வரை பல தலைமுறை நடிகருடன் நடித்தவர் மனோரமா. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சிறுவயது முதல் நாடகங்களில் நடித்து அதன் பின் கருப்பு வெள்ளை திரைப்படங்களில் நடிக்க தொடங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

காமெடியிலும் சரி.. குணச்சித்திரத்திலும் சரி மனோரமாவின் இடத்தை எந்த நடிகையாலுமே பிடிக்க முடியாது என்பது நிதர்சனம். இவரின் ஒரே மகன் பூபதி. இவரை சினிமாவில் கொண்டுவர மனோரமா பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் பலன் அளிக்கவில்லை சினிமாவில் சரியான வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. இயக்குனரும் நடிகருமான விசு இயக்கிய குடும்பம் ஒரு கதம்பம் படத்தின் மூலம் அறிமுகமான பூபதி சில படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் எடுபடவில்லை. மகனை ஹீரோவாக வைத்து மனோரமா ஒரு சொந்த படமும் எடுத்தார். ஆனால், ஓடவில்லை. அதன்பின் பூபதி சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார்.

இந்நிலையில்தான் சென்னை தி.நகரில் வசித்து வந்த பூபதி இன்று காலை 10:40 மணிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இயற்கை எய்தினார். இவருக்கு வயது 70. இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள் உள்ளனர். இவனை இறுதிச் சடங்கு நாளை மதியம் 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது.. இவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.