ஜெயம் ரவி மாதிரி கட்டிக்கிட்டு மாட்டிக்காத!.. மேடையில் கலாய்த்த மன்சூர் அலிகான்!....

by MURUGAN |
mansoor
X

Ravi Mohan: ஒவ்வொரு சமயமும் திரையுலகில் ஒரு பிரபலத்தின் சொந்த வாழ்க்கை சமூகவலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்படும். அந்தவகையில் கடந்த சில நாட்களாகவே ரவி மோகனின் விவாகரத்து விவகாரம்தான் சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. பல துறைகளில் இருப்பவர்களும் விவாகரத்து பெற்றாலும் சினிமா நடிகர் என்றால் அது அதிக கவனம் பெறுகிறது.

ஒருவரின் சொந்த வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனையை பற்றி பேச நமக்கு உரிமை இல்லை. ஆனால், சினிமா பிரபலங்கள் என்றால் அந்த உரிமையை எல்லோரும் எடுத்துக்கொள்கிறார்கள். இவர் செய்தது தப்பு?. அவர் செய்தது தப்பு?.. என தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ரவி மோகனும் இதற்கு தப்பவில்லை. தனது மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா ஆகியோர் மீது அடுக்கடுக்கான புகார்களை சொன்னார் ரவி மோகன். மனதளவில் பாதிக்கப்பட்டேன், கட்டுபபாடுகளை விதித்தார்கள், பணம் மட்டுமே குறியாக இருந்தார்கள், என் மனைவி என் மீது சந்தேகப்பட்டார் என பல புகார்களை சொன்னார்.


ஆனால், ஆர்த்தி அந்த புகார்களை மறுத்தார். அவரின் விருப்பப்படியே அவரை கட்டுப்படுத்தினேன். அவருக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டது. நன்றாக திட்மிட்டே என்னிடமிருந்து விலகிப்போனார். அவருக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டுதான் வீட்டிலிருந்து வெளியேறினார். குழந்தைகளிடமும் அவர் பேசுவது இல்லை’ என சொன்னார். அதோடு, விவகாரத்து வழக்கின்போது தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் எனவும் மனு அளித்தார். இதை பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில், ரவி மோகன் விவகாரத்தை நடிகர் மன்சூர் அலிகான் நக்கலடித்து பேசியிருக்கிறார். எப்போதும் சர்ச்சையாக பேசி சர்ச்சைகளில் சிக்குவார். ஒருமுறை திரிஷா பற்றி பேசி அவர் மன்னிப்பு கேட்கும் வரை போனது. இப்போது ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை நக்கலடித்திருக்கிறர்.

ராஜபுத்திரன் என்கிற பட விழாவில் பேசிய மன்சூர் அலிகான் அந்த படத்தில் நடித்திருந்த இளம் ஹீரோவை பார்த்து ‘பையன் பார்க்க சிவப்பாக அழகா இருக்கான். ஜெயம் ரவி மாதிரி கட்டிக்கிட்டு மாட்டிக்காத’ என பேசினார். இதைக்கேட்டு மேடையில் இருந்து எல்லோரும் சித்தார்கள்.


Next Story