நா.முத்துக்குமார் விழாவுக்கு போகாத நடிகர்கள்!.. இவங்க எப்பவுமே இப்படித்தான்!...

Na Muthukumar: தமிழ் சினிமாவில் நிறைய பாடல்களை எழுதியவர் கவிஞர் நா.முத்துக்குமார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலணி படங்களில் எல்லா பாடல்களையும் இவர்தான் எழுதினார். இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக இருக்கிறது. அதுபோக பல இசையமைப்பாளர்களின் படங்களிலும் இவர் பாடல்களை எழுதியிருக்கிறார்.
தெய்வங்கள் தோற்றேப்போகும் தந்தையின் அன்பின் முன்பே, கனா காணும் காலங்கள், நினைத்து நினைத்து பார்த்தேன் என இவர் எழுதிய எத்தனையோ வரிகளை ரசிகர் மனதிலிருந்து அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது. ராம் இயக்கிய எல்லா படங்களிலும் இவரே பாடல்களை எழுதியிருக்கிறார். அதில், பறவையே எங்கு இருக்கிறாய், ஆனந்த யாழை மீட்டுகிறாய் போன்ற பாடல்கள் காலத்தாலும் அழிக்க முடியாதவையாக இருக்கிறது.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் 2016ம் வருடம் தனது 41வது வயதில் மரணமடைந்தார். இந்நிலையில், அவரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டும், அவரது குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் ஆனந்த யாழை என்கிற நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் பெரும்பாலும் சத்யராஜ், பாக்கியராஜ் போன்ற சீனியர் நடிகர்களும், ஆர்.கே.செல்வமணி, பலா, லிங்குசாமி போன்ற சீனியர் இயக்குனர்களுமே கலந்துகொண்டனர். முத்துக்குமாரின் பாடல் வரிகளால் பிரபலமான பல நடிகர்களும் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. குறிப்பாக முத்துக்குமாரின் வரிகளால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த தனுஷ் கூட வரவில்லை. அதேநேரம், யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ், தேவா போன்ற இசையமைப்பாளர்கள் வந்திருந்தனர். இளம் நடிகர்களில் சிவகார்த்திகேயன் மட்டுமே வந்திருந்தார்.

நா.முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு இரண்டரை கோடி மதிப்புள்ள வீட்டை திரையுலகினர் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். மேலும், அவரின் குழந்தைகளுக்கான கல்வியை தனது கல்லூரி நிறுவனங்கள் இலவசமாக கொடுக்கும் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியிருக்கிறார்.