அடுத்தடுத்து வெளியாகும் பெரிய படங்கள்!.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கூலி!...

by MURUGAN |
coolie
X

2025ம் வருடம் துவங்கிய போது பொங்கலுக்கு வெளியான வணங்கான், காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஆனால், 12 வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கி விஷால் நடித்து ரிலீஸாகாமல் இருந்த மதகஜராஜா படம் பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது.

2025 வருடத்தை பொறுத்தவரை இதுவரை ரஜினி, கமல், விஜய் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அஜித்தின் விடாமுயற்சி படம் பிப்ரவரி மாதம் வெளியானது. ஆனால், இந்த படம் ரசிகர்களை ஏமாற்றியது. இப்படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், அஜித்தின் குட் பேட் அக்லி படம் கடந்த ஏப்ரம் மாதம் வெளியாகி வெற்றி பெற்றது.


ஏனெனில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியான பல காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. அதேபோல், சிம்பு, தனுஷ் படங்களும் இந்த வருடத்தில் இதுவரை வெளியாகவில்லை. சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இனிமேல்தான் துவங்கவுள்ளது. தனுஷ் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் வரை பல முக்கிய படங்கள் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படம் ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளது. லோகேஷுடன் ரஜினி இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.


அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்.ஐ,கே படம் செப்டம்பர் 18ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், தனுஷின் இட்லி கடை படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

அதேபோல், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடித்துள்ள பைசன், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூட் ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாகியுள்ளது. மேலும், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் வேட்டை கருப்பு படமும் தீபாவளியை குறி வைத்திருக்கிறது. மொத்தத்தில் ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை பல முக்கிய படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.

Next Story