
Cinema News
Bison: மாரிசெல்வராஜை உலுக்கிய துருவின் அந்த வார்த்தை! அப்போ ‘பைசன்’ வேற லெவலா இருக்கப்போது
Bison:
நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர் 17ஆம் தேதி ரிலீசாகிறது. படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படம் பற்றி மாரி செல்வராஜ் கூறிய சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மாரி செல்வராஜ் கரியரில் இந்த படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். பரியேறும் பெருமாள் திரைப்படம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படமாக அமைந்தாலும் இந்தப் படம் எனது கரியரில் மிகவும் முக்கியமாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்த படத்தை பொருத்தவரைக்கும் இது ஒரு கனமான சிக்கலான கதையை மையமாக வைத்து எடுத்து இருப்பதாகவும் இந்த படத்தை பார்த்த பிறகு மக்கள் மூலமாக ஒன்று நடக்கும் என்றும் அவர் நம்புவதாக தெரிவித்திருக்கிறார். இதில் கபடி வீரர் மணத்தி கணேசன் கதையும் என்னுடைய கதையும் இணைந்தே இந்த படத்தில் இருப்பதாக அவர் சொல்லியிருக்கிறார்.
கடினமான உழைப்பு:
அது மட்டுமல்ல தென் தமிழகத்து இளைஞர்கள் பல பேரின் கதையும் இதில் அடங்கி இருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த படத்திற்காக துருவ் விக்ரம் அப்படியே தன்னை ஒப்படைத்து விட்டார். அந்த அளவுக்கு என்மீது துருவ் விக்ரம் நம்பிக்கை வைத்தார் என்றும் தெரிவித்திருக்கிறார். படம் துவங்கிய கொஞ்ச நாளிலேயே துருவ் விக்ரமால் இந்த படத்திற்கு அவ்வளவு பெரிய உழைப்பை போட முடியவில்லை . ஒரு ரெகுலர் சினிமா ஷூட்டிங் மாதிரி இந்த படத்தை பண்ணிவிட முடியாது.
முழு கபடி வீரராக தென் தமிழகத்தில் இருக்கும் கிராமத்து இளைஞனாக மாறுவதும் கடினமான உடல் உழைப்பும் தேவைப்பட்டதால் துருவ் விக்ரமிற்கு இது சரியாக இல்லை. மிகவும் கஷ்டப்பட்டார். அதனால் அவரிடம் வேறு கதை வேண்டும் என்றால் பண்ணிடலாம் என்று மாரி செல்வராஜ் கேட்டிருக்கிறார். அதற்கு துருவ்விக்ரம் இந்த படம் எவ்வளவு உங்களுக்கு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். எனக்கு ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கிறது .இது உங்களுடைய கனவு படம் மாதிரி .அதனால் உங்களை நான் நம்புகிறேன்.
அசல்தன்மை:
என்னுடைய அப்பா ஸ்தானத்தில் உங்களை நான் பார்க்கிறேன். அதனால் நீங்கள் என்னை நல்லபடியாக பார்த்துக் கொள்வீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது என கூறினாராம். இந்த ஒரு வார்த்தை மாரி செல்வராஜை அப்படியே உலுக்கி போட்டு விட்டதாக ஒரு பேட்டியில் மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல இரண்டு வருடங்கள் இந்த படத்திற்காக முழு பயிற்சி எடுத்து படப்பிடிப்பிற்கு நிறைய நாட்கள் ஒதுக்கி முழுமையாக தன்னையே அர்ப்பணித்து இருக்கிறார் துருவ் விக்ரம். படம் பார்க்கும் பொழுது தான் அதனுடைய அசல் தன்மை தெரியும்.

மற்ற படங்களை விட இந்தப் படத்தில் அதிகமான உழைப்பை போட்டு இருக்கிறேன். அதனால் நான் நல்லபடியாக செய்து முடிப்பேன் என துருவ் நம்பினார் என படத்தைப் பற்றியும் அதில் நடித்த துருவ் விக்ரமை பற்றியும் மாரி செல்வராஜ் தொடர்ந்து பேட்டிகளில் கூறி வருகிறார். அவருடைய அப்பா நடிகர் விக்ரம் எந்த அளவு நடிப்பிற்காக மிகவும் மெனக்கிடுவாரோ அப்படியே தான் துருவ் விக்ரமும் பாலோ செய்து வருகிறார்.
அதனால் இந்த படம் மாரி செல்வராஜுக்கு மட்டுமல்ல துருவ் விக்ரமுக்கும் ஒரு மைல் கல்லான திரைப்படமாக அமையும். படம் ஆரம்பிக்கும் போதிலிருந்தே துருவ் விக்ரமை பற்றி ஒரு சர்ச்சை கிளம்பியது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா நடித்திருக்கிறார். அதனால் அனுபமாவும் துருவ் விக்ரமும் காதலிக்கிறார்கள், முத்த காட்சிகள் என தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வந்தன .ஆனால் அதற்கு அனுபமா மறுப்பு தெரிவித்தார். அதனால் அவர்களுடைய கெமிஸ்ட்ரியும் இந்த படத்தில் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.