×

கன்பார்ம் ஆன மாஸ்டர்... அதிரடி கொண்டாட்டம் ஆரம்பம்! சும்மா பட்டைய கிளப்புதில்ல..

கொரோனாவால் எதிர்பாராத நிலையில் தியேட்டர்கள் இழுத்து மூட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட நேரத்தில் கைவசம் உருவாகி ரிலீசுக்கு ரெடியாக இருந்த திரைப்படங்கள் சூரரைப்போற்று மற்றும் மாஸ்டர்.

 

கொரோனாவால் எதிர்பாராத நிலையில் தியேட்டர்கள் இழுத்து மூட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட நேரத்தில் கைவசம் உருவாகி ரிலீசுக்கு ரெடியாக இருந்த திரைப்படங்கள் சூரரைப்போற்று மற்றும் மாஸ்டர்.

ஆனால் சூர்யா தனது சூரரைப்போற்று படத்தை அமேசான் தளத்தில் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியிடவுள்ளார். இது சம்பந்தமாக தியேட்டர்காரர்களுக்கு சூர்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்ற எந்த ஒரு அறிவிப்பும் இல்லாததால் சூர்யா அத்தகைய முடிவை எடுத்தார். இது ஒருபுறமிருக்க விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்திற்கும் இதே கதிதான் என்று கூறினார்கள்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அக்டோபர் 15-ம் தேதியிலிருந்து தியேட்டர்கள் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்ததை தொடர்ந்து மாஸ்டர் படம் தியேட்டர் தான் என்பதும் கன்ஃபர்ம் ஆகியுள்ளது.

மேலும் ரசிகர்கள் தீபாவளிக்கு எதிர்பார்த்தாலும் மாஸ்டர் படம் 2021 பொங்கல் ரிலீசாக வெளியாகும் என்கிறது சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். முடங்கி கிடக்கும் திரையுலகை தூக்கி நிறுத்தும் ஆயுதமாக மாஸ்டர் திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

From around the web

Trending Videos

Tamilnadu News