ஒரே நாளில் உலக அளவில் புகழ்பெற்ற கோட்! தளபதி சினிமாவையும் விட்டுறாதீங்க..

by rohini |   ( Updated:2024-09-24 04:47:42  )
Vijay
X

Vijay

விஜய் நடிப்பில் செப்டம்பர் 5ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீசான திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்திருந்தார்கள்.

இவர்களுடன் இணைந்து பிரபுதேவா பிரசாந்த் யோகி பாபு லைலா அஜ்மல் மோகன் போன்ற பல நடிகர்களும் நடித்திருந்தார்கள். விஜய் படம் என்றாலே தமிழ்நாட்டையும் தாண்டி ஆந்திரா கர்நாடகா கேரளா மாநிலங்களில் இருக்கும் ரசிகர்களும் பெருமளவில் படத்தை ரசிப்பார்கள்.

ஆனால் கோட் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் மற்ற மாநிலங்களில் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை தமிழ்நாட்டு ரசிகர்கள் தான் கோட் திரைப்படத்தை பெரும் அளவில் கொண்டாடி வருகிறார்கள். இன்று வரை படத்தை பார்க்க ஆர்வமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படம் வெளியாகி 18 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 220 கோடி வசூல் செய்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு முன் பொன்னியின் செல்வன் லியோ போன்ற படங்கள் தான் 200 கோடி வசூலை தாண்டி இருந்த படங்களாக அமைந்தன.

இப்போது மூன்றாவது படமாக கோட் திரைப்படமும் அந்த லிஸ்டில் இணைந்து இருக்கிறது. இதன்மூலம் 200 கோடி வசூலை இரண்டு முறை பெற்ற நடிகராக விஜய் மட்டும் தான் அந்த சாதனையை அடைந்திருக்கிறார்.

இந்த நிலையில் கோட் திரைப்படத்தில் மிகவும் பிரபலமான பாடலான மட்ட பாடலின் வீடியோ சாங் நேற்று யூடியூபில் வெளியாகி இருக்கிறது. வெளியான ஒரே நாளில் உலக அளவில் பிரபலமாகி இருக்கிறது இந்த மட்ட பாடல் .உலக அளவில் மூன்றாவது இடத்தை பிடித்த பாடல் ஆகவும் இது அமைந்திருக்கிறது .அதிகம் பேர் பார்த்த மூன்றாவது பாடல் மட்ட பாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.





இப்படி அடுத்தடுத்து விஜயின் படம் ஒவ்வொரு புது சாதனையை பெறும் பொழுது ரசிகர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இத்தனை பெருமைக்கும் சாதனைக்கும் உரியவர் திடீரென சினிமாவில் இருந்து விலகுகிறேன் என்று கூறும் போது மனதளவில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது என ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகிறார்கள்.

Next Story