மதகஜராஜா 3வது நாள் கலெக்ஷன்... பொங்கலுக்கு சக்கை போடு போட்டுருக்கே...!
விஷால், சந்தானம் காம்போவின் கலக்கல் காமெடியில் சுந்தர்.சி. இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் மதகஜராஜா. இந்தப் படத்தைப் பார்த்தால் வாய்விட்டுச் சிரிக்கலாம்.
ஜாலியாகப் படம் பார்க்க: அப்படி ஒரு கலகலப்பான படம். 12 வருஷத்துக்குப் பிறகு வெளியான படம் என்றாலும் இன்றும் ரசிக்கும் வகையில் உள்ளது. பொங்கல் அன்று ஜாலியாகப் படம் பார்க்க வேண்டும் என்று தான் ரசிகர்கள் செல்வார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு படத்தை வெளியிட்டுள்ளார்கள்.
காமெடி : அது உண்மையிலேயே நல்ல பலனைக் கொடுத்துள்ளது. காமெடியில் சந்தானம் சூப்பராகக் கவுண்டர் கொடுத்துள்ளாராம். இவர் ஏன் ஹீரோவாக நடித்தார். பேசாமல் காமெடியனாகவே இருந்துருக்கலாமே என்பதே அனைத்துத் தரப்பு ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.
அழுத்தமான முத்திரை: அஞ்சலியும், வரலட்சுமியும் அம்சமாக வந்து மனதை அள்ளுகிறார்கள். சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா, சோனு சூட் உள்பட பலர் உள்ளனர். சுந்தர்.சி. படம் என்றாலே இனி நம்பி போகலாம். சிரிப்புக்குக் கேரண்டி. காமெடிக்குப் பஞ்சமில்லை என்ற அழுத்தமான முத்திரையைப் பதித்து விட்டார்.
பொங்கல் கலெக்ஷன்: அவர் பேய்ப்படங்களைத் தான் எடுப்பார் என்பதுதான் இன்றைய கிட்ஸ்களுக்குத் தெரியும். ஆனால் அப்போது காமெடி ஜானரிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார் என்பதை இந்தப் படம் வந்து நினைவூட்டி விட்டது. சரி. இப்போது படத்தின் 3வது நாள் (பொங்கல்) கலெக்ஷன் என்னன்னு பார்க்கலாமா...
மதகஜராஜா முதல் நாளில் 3 கோடியும், 2வது நாளில் 3 கோடியும், 3வது நாளில் 6.25 கோடியும் என மொத்தம் 12.25 கோடியை வசூலித்துள்ளது. இதை விட அதிகமாகவும் இருக்கலாம். இன்னும் வரும் நாள்கள் ஒரு வாரகாலம் பொங்கல் விடுமுறை என்பதால் வசூல் பல மடங்கு எகிறும் என்பதே உண்மை. மற்ற படங்கள் போட்டிக்கு வந்தாலும் கலகலப்பாக வந்துள்ள ஒரே படம் இதுதான் என்பதால் தனித்து நின்று வெற்றிவாகை சூடும் என்று எதிர்பார்க்கலாம்.