மாதவனைப் பார்த்து எல்லாரும் கத்துக்கோங்க... சாக்லேட் பாயோட ரகசியம் இதுதானா?

by sankaran |   ( Updated:2024-10-30 02:00:15  )
mathavan
X

மாதவனை நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் என்றே அழைத்தனர். அவரது ஆரம்பகால காதல் படங்கள் எல்லாமே மாஸா இருந்தன. குறிப்பாக மணிரத்னத்தின் அலைபாயுதே, டும் டும் டும் படங்களை இன்றளவும் மறக்க முடியாது.

தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்த ரன் படம் தான் அதிரி புதிரி ஹட் ஆனது. அதுவும் அந்தப் படத்தில் இருந்து தான் அவரது ஆக்ஷன் பாதை ஆரம்பமானது என்றே சொல்லலாம். மின்னலே படமும் மாஸ் ஹிட் ஆனது. அந்த வகையில் மாதவன் கமலுடன் அன்பே சிவம் படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அப்படி வளர்ந்த அவர் ஒரு கட்டத்தில் ரொம்பவே மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தத் தொடங்கினார். அதற்கு உதாரணம் இறுதிச்சுற்று. அதன்பின் ராக்கெட்ரி போன்ற படங்கள் தரமாக இருந்தன.

தற்போது மாதவன் வாழ்க்கையில் தான் கடைபிடித்த விதிகள் குறித்து இப்படி சொல்கிறார். என்னோட வாழ்க்கையில் நான் ;3 விதிகளைப் பின்பற்றுகிறேன். ஒண்ணு தெரிஞ்சும் யாருடைய மனதையும் நோகடிக்காதீங்க. அடுத்தது பண ரீதியாக யாரையும் ஏமாத்தாதீங்க.

மூணாவது பெரியவங்களோ, சிறியவங்களோ யாரா இருந்தாலும் முதல்ல அவங்களை மனுஷனா மதி என்ற இந்த 3 விதிகளையும் பின்பற்றுகிறாராம் மாதவன். அதனால் தான் மாதவன் இன்று வரை சாக்லேட் பாயாகவே இருக்கிறாரோ...!

சமீபத்தில் மாதவன், ஷாலினி இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வைரலானது. அதற்கு ஷாலினி என்றென்றும் புன்னகை என்று கேப்ஷன் கொடுத்து அசத்தி இருந்தார்.


போட்டாவைப் பார்க்கும் போது அலைபாயுதே கெட்டப்பில் மாதவன் இருந்ததைப் பார்த்ததும் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்களா என்றும் நெட்டிசன்கள் கமெண்டைத் தட்டி விட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அலைபாயுதே படத்தில் மாதவன், ஷாலினி ஜோடி சூப்பராக ஒர்க் அவுட் ஆகியது என்றே சொல்லலாம். ஆனால் அஜீத், ஷாலினி ஜோடி அமர்க்களத்தில் ஒர்க் அவுட் ஆனது மட்டுமல்லாமல் நிஜ தம்பதியர்களாகவும் ஆகிவிட்டார்கள்.

பொதுவாகப் பெண்களுக்குப் பிடித்த வகையில் அழகாகவும், கியூட்டாகவும் இருந்தால் சாக்லேட் பாய் என்பார்கள். ஆனால் அது மட்டுமே போதாது. அவர்களது குணநலன்கள் தான் அங்கு பேசும் என்பதற்கும் மாதவனின் இந்த 3 விதிகளும் காரணமாகத் தான் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Next Story