காக்க காக்க படத்தில் நடிக்க மறுத்த மாதவன்!.. அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்!...

by sankaran |   ( Updated:2024-10-28 03:30:31  )
madhavan
X

madhavan

வாய்ப்பு எதுவும் கிடைக்காதான்னு ஏங்கிக் கொண்டு இருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் கிடைத்த வாய்ப்பையும் விட்டுக் கொடுத்துவிட்டு கெத்தாக இருக்கும் நடிகர்கள் ஒருசிலர் தான் இருப்பாங்க. ஆனா ஒரு சிலர் கிடைத்த அரிய வாய்ப்பையும் பெறாமல் அவருக்கே ஐடியா கொடுத்த கதையும் அரங்கேறியுள்ளது. வாங்க பார்க்கலாம்.

கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் மின்னலே படத்தில் மாதவன் நடித்தார். ஆனால் அவரது காக்க காக்க படத்தில் நடிக்க அணுகியபோது மறுத்தார். இது ஏன்னு கேட்டா ஆச்சரியமான பதில் வருகிறது. இது குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன பதில் சொல்றாருன்னு பாருங்க.

'காக்க காக்க' படத்தில் ஏன் மாதவன் நடிக்கலங்கறதைப் பத்தி கௌதம் வாசுதேவனே ஒரு பேட்டியில பகிர்ந்துள்ளார். அவர் சொன்னது இதுதான்.


அதே மாதிரி மெச்சூரிட்டி வருவது என்பது ஆச்சரியமான விஷயம். 'மின்னலே' படத்தில் பணியாற்றியபோது கௌதம் வாசுதேவனுக்கும், மாதவனுக்கும் நல்ல ஒரு நட்பு இருந்தது. அந்த நட்பின் அடிப்படையில கௌதம் வாசுவேனை மாதவன் எப்படி பீட் பண்ணிப் பார்த்துருக்காரு பாருங்க.

இவரு பாயிண்ட் ஆப் வியூவுல நம்மை வச்சிப் படம் பண்ணிட்டாரு. அடுத்து மிகப்பெரிய கதாநாயகர்களை வைத்துப் படம் பண்ணி கௌதம் வாசுதேவன் அடுத்த நிலைக்கு உயரணும். தொடர்ந்து நம்ம கூடவே பயணம் பண்ணிக்கிட்டு இருந்தா அந்த நிலை கிடைக்காதுன்னு மாதவன் சொல்லிருக்காரு.

இந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணிட்டோம். இது பெரிய வெற்றிப்படமா ஆயிடுச்சு. அடுத்து வந்து வெவ்வேறு கதாநாயகர்களுடன் ஒர்க் பண்ணினாதான் உங்களோட வளர்ச்சி வந்து பெரிசா இருக்கும்.

நீங்க வேற கதாநாயகர்களோட ஒர்க் பண்ணுங்க. யாரும் பண்ணலேன்னா நான் நிச்சயமா நடிக்கிறேன்னு சொல்லிட்டாராம். மாதவனைப் பொருத்த வரையில் அவர் சாதாரணமான நடிகர் அல்ல. நல்ல ஒரு இன்டலிஜென்ட். மின்னலே, அலைபாயுதே படங்களில் பார்க்கலாம். எந்த மாதிரியான படங்களை நாம பண்ணனும்கற விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்கிறவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story