'சவதீகா' பாட்டுக்கு இவ்வளவு அர்த்தம் இருக்கா?.. ராக்ஸ்டார் எப்படி யோசிச்சிருக்காரு பாருங்க..
நடிகர் அஜித்: தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இரண்டு ஆண்டுகளும் அஜித் ரசிகர்கள் அஜித்தின் படம் வெளியாகாதா? என்று காத்திருந்து காத்திருந்து ஏமாந்தது மட்டும்தான் மிச்சம். ஆனால் அடுத்த வருடம் அப்படி இருக்க போவது கிடையாது, அடுத்தடுத்து அஜித்தின் 2 திரைப்படங்கள் வெளியாகி மாஸ் காட்டப் போகின்றது.
விடாமுயற்சி:
இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு பொங்கல் பண்டிகைக்கு வெளியான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இப்படத்தை முடித்த கையோடு லைக்கா ப்ரொடக்ஷன் மூலமாக ஒரு புதிய திரைப்படத்தில் கமிட்டாகி இருந்தார். இப்படத்தை யார் இயக்கப் போவது என்கின்ற நிலையில் கடைசியில் மகிழ்திருமேனி கையில் இந்த திரைப்படம் சென்றடைந்தது.
ஆனால் படத்தை ஜவ்வு போல் இழுத்து 2 வருடங்கள் ஆக்கிவிட்டார். இந்த திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான பிரேக் டவுன் என்கின்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அதாவது ஒரு நாளில் நடக்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார்கள். அஜர்பைஜானில் படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு ஏற்பட கால சூழ்நிலை காரணமாக படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப்போனது. எது எப்படியோ ஒரு வழியாக படத்தை தற்போது தான் முடித்திருக்கிறார்கள்.
பொங்கல் ரிலீஸ்:
படம் இந்த வருடத்தில் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில் படத்தின் அப்டேட் கூட வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் விடாமுயற்சி திரைப்படம் வருமா வராதா? என்கின்ற சந்தேகத்தில் இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார் அஜித்.
அந்த திரைப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வர விடாமுயற்சி திரைப்படத்தையே ரசிகர்கள் மறந்து விட்டார்கள். இப்படியே போனால் சரிப்பட்டு வராது என்று முடிவு எடுத்த படக்குழுவினர் படத்தை விரைந்து முடிப்பதற்கு முடிவு செய்தார்கள். அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் தற்போது பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் தாய்லாந்தில் இப்படத்தின் பேட்ச் ஒர்க் அனைத்தும் நடந்து முடிந்த நிலையில் டப்பிங் பணியையும் முடித்து விட்டார் நடிகர் அஜித்.
ஃபர்ஸ்ட் சிங்கிள்:
உடல் எடையை குறைத்து 90'ஸில் ரசிகர்கள் பார்த்து ரசித்த நபராக தற்போது மாறி இருக்கின்றார் நடிகர் அஜித். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வந்த நிலையில் சமீபத்தில் வெளியான டீசரில் இவர் போட்டிருந்த பிஜிஎம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அந்த வகையில் நேற்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருந்தது.
அஜித் மற்றும் திரிஷா காம்போவில் வெளியான இந்த பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றது. 'சவதீகா' என்று தொடங்கும் இந்த பாடல் முதலில் கேட்கும் போது என்னடா வசனமே புரியல.. என்கின்ற பாணியில் இருந்தது. இருப்பினும் அஜித் இந்த பாடலுக்கு நடனமாடியதை பார்த்து கொண்டாடி வருகிறார்கள்.
பாடலின் அர்த்தம்:
சவதீகா என்று தொடங்கும் இந்த பாடலை கானா பாடகரான அந்தோணி தாசன் பாடியிருக்கின்றார். இவர் சமீபத்திய பேட்டியில் பாடல் வரிகளின் அர்த்தம் குறித்து பேசி இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'சவதீகா என்றால் தாய்லாந்து மொழியில் வெல்கம் என்று அர்த்தம். மேலும் கபுன்கா என்றால் சென்று வாருங்கள் என்று அர்த்தம். அனிருத் அவர்கள் தான் பாடல் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக தாய்லாந்து மொழியை பயன்படுத்தி இப்படி ஒரு பாடலை தன்னை பாட வைத்திருக்கின்றார்' என்று கூறி இருக்கின்றார்.