விஜய்.. தனுஷ்… இளையராஜா!.. இந்த வீக் எண்ட் செம ட்ரீட்!.. மீம்ஸ் கிரியேட்டர்ஸ் வெயிட்டிங்!..
TVK Vijay: முன்பெல்லாம் ஒரு நடிகரையோ, இயக்குனரையோ அல்லது ஒரு அரசியல்வாதியையோ பத்திரிகைகள் மட்டுமே விமர்சித்து வந்தன. ஆனால் எப்போது எல்லோரின் கையிலும் ஸ்மார்ட் போன் வந்ததோ அப்போது முதலே எல்லோருமே விமர்சகர்களாக மாறிவிட்டார்கள். விமர்சித்தால் மட்டும் பரவாயில்லை. பங்கமாக கலாய்ப்பது, கலாய்த்து மீம்ஸ் போடுவது, ட்ரோல் செய்வது, நெகட்டிவான ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டிங் செய்வது என சமூக வலைதளங்களில் பலரும் வன்மத்தோடு அலைகிறார்கள்.
குறிப்பாக எவ்வளவு பெரிய சீரியசான விஷயமாக இருந்தாலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் அதை காமெடியாக மாற்றி மீம்ஸ்களை உருவாக்கி facebook, twitter போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து சிரிக்க வைக்கிறார்கள். சின்ன நடிகர் முதல் முதலமைச்சர் வரை இப்போது யாராக இருந்தாலும் ட்ரோலில் இருந்து தப்பிக்க முடியாது. பொதுவாக திரைத்துறையில் யாரேனும் ஒருவர்தான் அவ்வப்போது ட்ரோல்களில் சிக்குவார்கள் ஆனால் இந்த வார இறுதியில் மூன்று பிரபலங்கள் கண்டெண்ட் கொடுக்க காத்திருக்கிறார்கள்.
இதில் முதலில் இருப்பவர் விஜய். அரசியல்வாதியாகிவிட்ட விஜய் செப்டம்பர் 13ஆம் தேதியான நாளை முதல் அரசியல் சுற்றுப்பணத்தை துவங்குகிறார். மொத்தம் 16 நாட்கள், 16 சனிக்கிழமைகளில் அவர் முக்கிய ஊர்களுக்கு சென்று மக்களிடம் பேசவிருக்கிறார். நாளை திருச்சியில் அவர் பேசுகிறார். அவர் என்ன பேசப் போகிறார்? எப்படி ட்ரோல் செய்யலாம் என நெட்டிசன்களும், திமுகவினரும் காத்திருக்கிறார்கள்.
அடுத்து இதில் சிக்கவிருப்பது இசைஞானி இளையராஜா. இவர் என்ன பேசினாலும் அது சர்ச்சைதான். வெளிநாட்டு இசையான சிம்பொனியை உருவாக்கியதற்காக தமிழக அரசு சார்பில் நாளை இவருக்கு பாராட்டு விழா நடக்கிறது. இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இந்த மேடையில் இளையராஜா என்ன பேசப்போகிறார் என மீம்ஸ் கிரியேட்டர்கள் வெறிகொண்டு காத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே குபேரா பட விழாவில் பன்ச் டயலாக் பேசி ட்ரோல்களில் சிக்கிய தனுஷ் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இட்லி கடை படத்தின் ஆடியோ லான்ச்சில் பேசவிருக்கிறார். எனவே அவர் என்ன பேசப் போகிறார் என மீம்ஸ் கிரியேட்டர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மொத்தத்தில் இந்த வார இறுதியில் மூன்று திரைப் பிரபலங்கள் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கண்டண்ட் கொடுக்கப் போகிறார்கள்.
