விஜய் பட நடிகை முன்னாடி பேச தயங்கும் நடிகர்கள்.. காரணத்த கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

by Ramya |
meenatchi
X

Meenakshi Chaudhary: தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் மீனாட்சி சவுத்ரி. ஆரம்ப காலகட்டத்தில் பல் மருத்துவராக இருந்து வந்த மீனாட்சி சவுத்ரி மாடலிங் மீதி இருந்த ஆர்வம் காரணமாக மாடலிங் செய்து வந்தார். பின்னர் வெப் சீரியஸ் களில் நடித்து வந்த இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே மிகச் சிறப்பாக நடித்திருந்தார் மீனாட்சி. அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் என்கின்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு பெரிய அளவுக்கு அறிமுகத்தை கொடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து நடிகர் விஜயின் கோட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் மீனாட்சி சவுத்ரி. ஆனால் படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிய அளவுக்கு பேசப்படவில்லை. இதனால் மிகப்பெரிய விமர்சனங்கள் எழுந்தது. பலரும் நடிகை மீனாட்சியை கிண்டலும், ட்ரோலும் செய்து வந்தார்கள். இதனால் மன அழுத்தத்தில் இருந்ததாக சமீபத்தில் கூட மீனாட்சி கூறியிருந்தார்.


இருப்பினும் இவரை தெலுங்கு சினிமா காப்பாற்றி விட்டது. கடந்த தீபாவளி பண்டிகைக்கு துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதைத்தொடர்ந்து தற்போது பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளிவந்த சங்கராந்திகி வஸ்துன்னம் என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் வெங்கடேஷ் அவர்களுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய பாராட்டை பெற்று இருக்கின்றார். இப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த படத்திம் குறித்து விளம்பரம் செய்ய இயக்குனர் அனில் ரவிபுடி, வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஒரு டிவி நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை ராணா தொகுத்து வழங்கி வருகின்றார்.

அப்போது மீனாட்சியை பார்த்து பலரும் கூறியிருந்ததாவது படப்பிடிப்பு தளத்தில் யாராவது பேசினால் சிரித்தால் போதும் மீனாட்சி அவர்களின் பல்லை தான் உன்னிப்பாக கவனித்து பார்ப்பாராம். இவருக்கு பிரேஸ் போட வேண்டும், இவரின் பல்லை கிளீன் செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பாராம். இதனை அவரே கூறி இருந்ததாக அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் எல்லாம் தெரிவித்திருந்தார்கள்.

இதே போல் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் நிகழ்ச்சியிலும் கூட பல்லை பற்றி தான் அதிகமாக பேசியிருந்தார் மீனாட்சி. இதனால் அவரிடம் யார் பேசினாலும் அவர்களின் பல்லை தான் உற்று உற்றுப் பார்ப்பாராம் மீனாட்சி. இதனை துல்கர் சல்மான் லக்கி பாஸ்கர் படம் வெளியிட்ட போது நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கூறி இருந்தார். இதை பார்த்த பலரும் மீனாட்சி முன்பு பல நடிகர்கள் பேசவோ சிரிக்கவோ நிச்சயம் தயங்குவார்கள் என்று கூறி வருகிறார்கள்.

Next Story