இது சாதா பைத்தியம் இல்ல சரியாகாத பைத்தியம்… மீண்டு வந்து காமெடி செய்யும் மீரா மிதுன்!

Meera Mithun: பிரபல மாடல் அழகியும், பிக்பாஸ் போட்டியாளருமான மீரா மிதுன் பல வருடம் கழித்து மீண்டும் வந்து உளறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக எல்லா பிரபலங்களும் நன்றாக பேசி லைக்ஸ் குவித்து மட்டுமே ஹிட்டடிப்பது இல்லை. சில பிரபலங்கள் தன்னை விமர்சித்தாலும் தனக்கு நல்லது தான் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். அப்படி ஒரு லிஸ்ட்டே தமிழில் இருக்கிறது.
அதில் முக்கியமானவர் மாடல் அழகி மீரா மிதுன். இவர் முதலில் பிரச்னை குறித்து பேசிய போது பாவம் என நினைத்தவர்கள். அப்புறம் தான் இவர் என்ன இப்படி உளறுகிறார் என்ற நிலைக்கு வந்தனர். அந்த வகையில் பரபரப்பில் இருந்தவரை பிக்பாஸ் சீசன் 3க்குள் அனுப்பினர்.
அங்கையும் போய் தன் வேலையை செய்து வந்தார். ஒரு கட்டத்தில் இயக்குனர் சேரன் மீது அவதூறு பரப்ப நினைத்து குற்றச்சாட்டை முன் வைக்க கமல்ஹாசன் குறும்படம் போட்டு காட்டி வெளியேற்றினார். இதை தொடர்ந்து வெளிவந்தவர் மீரா மிதுன்.
தொடர்ச்சியாக நடிகைகள் தன் முக சாயலை காப்பி அடித்து வருவதால் தான் ஹிட்டாக இருப்பதாக உளறிக்கிட்டு இருந்தார். ரசிகர்கள் அவரை கலாய்த்து கொண்டு இருந்தனர். அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் விஜய், அஜித் என எல்லாரையுமே விமர்சித்தார்.
திடீரென ஒரு ஆண் நண்பருடன் ஊர் சுற்றி வந்த மீரா மிதுன் அவதூறு பேச்சால் திடீரென கைது செய்யப்பட்டார். அப்போதே வீடியோ போட்டு வைரலாக்கி ஜெயிலுக்கு போனவர். கொஞ்ச நாள் அமைதியாக ஆள் அடையாளம் இல்லாமல் இருந்தார்.
இந்நிலையில், மீண்டு வந்த மீரா மிதுன் எனக்கு ஜெயலலிதா அம்மா இறந்த பின்னர் அதிமுகவின் பொது செயலாளர் பதவி வந்தது. நான்தான் அதெல்லாம் வேண்டாம் எனக் கூறி மறுத்துவிட்டேன். மக்களுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி இருப்பதாக பேசி இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் இவங்க சரியே ஆக மாட்டாங்க. பைத்தியக்கார ஹாஸ்பிட்டல் தான் போகணும் என வரிசையாக கலாய்த்து வருகின்றனர். அக்கா விட்ருக்கா என பலரும் கமெண்ட் போட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.