சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’.. ஏஆர் முருகதாஸ் சூப்பர் தகவல்..!

by ROHINI |
shanmugapandian
X

shanmugapandian

இன்று சண்முகப்பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன், சுதீஷ், சசிகுமார், கஸ்தூரி ராஜா, ஏஆர் முருகதாஸ் போன்றோர் கலந்து கொண்டனர். சகாப்தம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சண்முகபாண்டியன். விஜயகாந்துக்கு பிறகு எப்படியாவது அவரது இடத்தை தொட்டுவிடுவார் என்றுதான் அனைவரும் காத்திருந்தனர்.

ஆனால் அது முடியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறார். விஜயகாந்த் எத்தனை பேரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கிறார். ஏன் இன்று தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக இருக்கும் விஜயை ப்ரோமோட் செய்ததே விஜயகாந்த் .செந்தூரப்பாண்டி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து விஜயை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பெருமை விஜயகாந்தைத்தான் சேரும்.

இந்த நிலையில் சண்முகப்பாண்டியனையும் சினிமாவில் நல்ல அந்தஸ்தை அடைய விஜய் உதவ வேண்டும். சண்முகப்பாண்டியன் படத்தில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்து விஜயகாந்த் செய்ததை போல் விஜயும் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி வந்தனர். ஆனால் இன்று விஜய் அரசியலில் இறங்கி மக்களுக்காக சேவை செய்ய ஆயத்தமாகி வருகிறார்.

இந்த நிலையில் படைத்தலைவன் பட இசை வெளியீட்டு விழாவில் முருகதாஸ் பேசும் போது ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்திருக்கிறார். சண்முகப்பாண்டியனுக்கு எப்படி கட் அவுட் வைக்கப்போகிறார்கள் என்றுதான் நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் அவரே கட் அவுட் அளவு உயரம் இருக்கிறார். அதனால் வளர்ந்துவாங்க. ரமணா 2 எடுப்போம் என மிகச்சாதாரணமாக சொல்லி சென்றார் முருகதாஸ்.

ramana

ramana

விஜயகாந்துக்கு ஒரு கட்டத்தில் வெற்றிப்படங்களே இல்லாத நிலையில் முருகதாஸின் ரமணா படம்தான் விஜயகாந்தை மீண்டும் இந்த சினிமாவில் நிலைத்து நிற்க உதவியது. அந்த படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. அதனால் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சண்முகப்பாண்டியனை வைத்து எடுக்க திட்டமிட்டிருக்கிறார் போல முருகதாஸ். அதை பகிரங்கமாக இன்று மேடையிலேயே கூறினார்.

Next Story