4 ஆயிரம் கோடி சொத்து!. பிரபலத்தின் மகளை காதலிக்கும் அனிருத்?!.. எப்போ கல்யாணம்?!...

aniruth (1)
Aniruth : சினிமாவில் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர் அனிருத். ஒருபக்கம் பார்த்தால் ரஜினியின் மனைவி லதாவின் சகோதரர் ரவி ராகவேந்திராவின் மகன் இவர். ரவி பல படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். அனிருத்தின் தாத்தா சினிமாவில் இயக்குனராக இருந்தவர். இவரின் பாட்டிதான் சென்னையில் பத்ம சேஷாத்ரி பள்ளியை துவங்கியவர். நடன பத்ம பூஷன் பத்மா சுப்பிரமணியனும் இவரின் பாட்டிதான்.
பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே இசையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தனுஷ் ரஜினியின் மகளை திருமணம் செய்தபின் அனிருத்தும், தனுஷும் நண்பர்களாகிவிட்டனர். இருவரும் சேர்ந்து பாடல்களை உருவாக்க அப்படி உருவான பாடல்தான் ஒய் திஸ் கொலவெறி. இந்த பாடல் உலகமெங்கும் பிரபலமானது.

தனுஷின் 3 படம் மூலம் சினிமாவில் இசையமைக்க துவங்கினார் அனிருத். அவரின் பாடல்கள் ரசிகர்களுக்கு பிடித்துப்போக தொடர்ந்து தனுஷின் படங்களுக்கு இசையமைத்து வந்தார். ஒருகட்டத்தில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருக்கும் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக மாறினார். விஜய், அஜித், கமல் துவங்கி ரஜினி படங்களுக்கும் அனிருத்தே ஆஸ்தான இசையமைப்பாளராக மாறிவிட்டார்.
அனிருத்துக்கு இப்போது 34 வயது ஆகிறது. இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இடையில் நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டு அது பிரேக்கப் ஆனது. இப்போது மீண்டும் அனிருத் காதலில் விழுந்திருக்கிறார் என செய்திகள் கசிந்திருக்கிறது. சன் டிவி கலாநிதிமாறன் ஒரே மகள் காவ்யா மாறன்தான் அந்த பெண் என்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு அனிருத் இசையமைத்தபோது காவ்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு நட்பாகி அது காதலாக மாறியிருக்கலாம் என்கிறார்கள்.

காவ்யா மாறன் சன் ரைசஸ் கிரிக்கெட் அணியை நடத்தி வருபவர். அப்பாவின் வியாபரத்திற்கு துணையாக இருப்பவர். இருவரின் காதலுக்கும் இருவர் வீட்டிலும் தடை சொல்லமாட்டார்கள் என்கிறார்கள். 4 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு கொண்டவர் கலாநிதிமாறன். அவரின் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடினால் தமிழ்நாடில் யாரும் கிடைக்கமாட்டார்கள். எனவே, அனிருத்தை அவர் டிக் அடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.