இளையராஜா செஞ்சது சாதாரண வேலை இல்ல... இசை அமைப்பாளர் தீனா சொன்ன அந்தத் தகவல்

by Sankaran |
ilaiyaraja
X

இளையராஜா சமீபத்தில் லண்டன் சென்று தன் அசாத்திய திறமையை வெளிக்காட்டி வந்துள்ளார். சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்துள்ளார். அதுவும் ஆங்கிலேயர்களில் இசை ஜாம்பவான்கள் பலர் உண்டு. அவர்களை எல்லாம் ஒன்று திரட்டி அவர்களுக்கே தன்னோட நோட்ஸைக் கொடுத்து கமெண்ட் கொடுத்து அதில் சாதனை படைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.

பெரிய சாதனை: இளையராஜா இந்த சிம்பொனி இசைக்காக வெறும் 35 நாள்களில் நோட்ஸ் எழுதி முடித்து விட்டாராம். இந்த இசைக்குழுவில் 100 பேர் இருந்தால் அந்த 100 பேருக்கும் தனித்தனியாக இசைக்குறிப்புகளை எழுதிக் கொடுப்பாராம் இளையராஜா. அதற்கு பல ஆண்டுகள் ஆகுமாம். ஆனால் வெறும் 35 நாள்களில் எழுதி முடித்தது பெரிய சாதனை.

தற்பெருமை: அதுவும் 82 வயதுல இந்த மாதிரி மகத்தான சாதனையை யாராலும் படைக்க முடியாது. அதனால்தான் இளையராஜா தற்பெருமை கொள்வதில் தவறே இல்லைன்னு பலரும் சொல்றாங்க. அவரே என்னைப் பார்த்து தமிழக இளைஞர்கள் உத்வேகத்தோடு பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்கிறார்.


13 நாடுகளில் சிம்பொனி: இளையராஜா கிராமத்தில் இருந்து வந்து இன்று லண்டன் வரை சென்று இவ்ளோ பெரிய சாதனையைப் படைத்துள்ளார். இது ஆரம்பம்தான். இன்னும் 13 நாடுகளில் சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவரது சிம்பொனியைப் பற்றி இசை அமைப்பாளர் தீனா சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.

அவங்களே பிரமிச்சிட்டாங்க: ஆங்கில இசை படித்தவர்கள் கிட்ட, இளையராஜா அவருடைய இசையை கொண்டு போயிட்டு இந்த மாதிரி வாசி என்று கமெண்ட் பண்ணி, அவங்களே பிரமிச்சிப் போற அளவுக்கு ஒரு புதுமையான வடிவத்தைக் கொடுத்து இருக்கிறார். ஏன்னா அவங்க எத்தனையோ சிம்பொனி வாசித்து இருப்பார்கள்.

சாதாரண விஷயம் கிடையாது: அவர்கள் இல்லையே இது சிம்பொனி மாதிரி இல்லையே என்று கூட சொல்ல வாய்ப்பு இருக்கும். ஆனா, அவங்களே பிரமிக்கிற அளவுக்கு, பீத்தோவன் மற்றும் மொஸார்ட்டுக்கு இணையாக இவருடைய இசை இருக்கிறது. அதனால்தான் அது ஸ்டேஜ்ல வந்தது. இல்லை என்றால் வந்து இருக்காதுரு. அவங்களுக்குன்னு ஒரு ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் இருக்கும். அங்கே போய் நம்ம என்டர் ஆகி கமெண்ட் பண்றது சாதாரண விஷயம் கிடையாது என்கிறார் இசை அமைப்பாளர் தீனா.

Next Story