1. Home
  2. Cinema News

தேவாவின் சகோதரர்.. பிரபல இசையமைப்பாளர் சபேஷ் மரணம்!.. திரையுலகினர் இரங்கல்....

sabesh

90களில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பல படங்களுக்கும் இசையமைத்தவர் தேவா. பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு படத்தின் பாடல்கள் தேவாவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன் தொடர்ந்து பல படங்களுக்கும் இசையமைத்தார்.

ஒரு கட்டத்தில் கே,எஸ்.ரவிக்குமார், வஸந்த், எஸ்.ஜே. சூர்யா என 90களில் பிரபலமாக இருந்த பல இயக்குனர்களும் தேவாவின் பக்கம் போனார்கள். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களுக்கும் தேவா இசையமைத்தார்.

subash

ஒருபக்கம் தேவா சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவரின் சகோதரர்கள் சபேஷ் - முரளி என இருவரும் ஒன்றாக இணைந்து திரைப்படங்களுக்கு இசையமைத்தார்கள். குறிப்பாக சமுத்திரம், தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, முதல் கனவே, கூடல் நகர், இந்திரலோகத்தில் நா அழகப்பன், பொக்கிஷம், மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட படங்களில் இவர்களின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த சபேஷ் தற்போது மரணம் அடைந்திருக்கிறார். அவர் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவிருக்கிறது. இதைத்தொடர்ந்து இசை ரசிகர்களும், திரையுலகினரும் சபேஷின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.