நீங்க எதிர்பார்த்தது விரைவில்! சூர்யாவின் ‘கருப்பு’ படத்தில் இப்படிலாம் இருக்கா?

surya
சூர்யாவின் நடிப்பில் அடுத்து அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. இந்தப் படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார். படத்திற்கு இசை சாய் அபயங்கர். சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா இந்த படத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யா த்ரிஷா காம்போவில் இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. சமீப காலமாக த்ரிஷாவும் மீண்டும் தனது வின்டேஜ் நடிகர்களுடன் நடித்து மீண்டும் பிரபலமாகி வரும் நிலையில் இப்போது சூரியாவுடன் இந்த படத்தில் இணைந்திருப்பது மீண்டும் ஒரு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
முதலில் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாகத்தான் இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் ரகுமான் இந்த படத்தில் இருந்து விலக சாய் அயங்கர் இந்த படத்திற்குள் நுழைந்தார். சமீப காலமாக சூர்யாவின் படங்கள் பெரும் தோல்வியை தழுவி வரும் நிலையில் இந்தப் படமாவது ரசிகர்களை திருப்திப்படுத்துமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அவருடைய நடிப்பில் பெரும் விமர்சனத்தை சந்தித்த திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் யாரும் எதிர்பாராத ஒரு தோல்வியை தழுவியது. அதற்கு அடுத்தபடியாக வெளியான ரெட்ரோ திரைப்படமும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. அதற்கு காரணம் சூர்யா ஒரு பக்கம் இருந்தாலும் கார்த்திக் சுப்பராஜ் மீது இருந்த நம்பிக்கை .ஆனால் அவர்கள் கூட்டணியும் தோல்வியை சந்தித்தன.
இதற்கிடையில் தான் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கிறார். இது ஒரு ஆன்மீகம் மற்றும் ஆக்சன் படமாக இருக்கும் என ஆரம்பத்தில் இருந்தே சொல்லப்பட்டது. இதைப் பற்றி சமீபத்திய ஒரு விழாவில் படத்தின் இசை அமைப்பாளர் சாய் அபயங்கர் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது கருப்பு திரைப்படம் கண்டிப்பாக சூர்யாவின் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்றும் அந்தப் படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்தநாளின் போது வெளியாகும் என்றும் சூர்யாவை எப்படி எல்லாம் பார்க்க நினைத்தார்களோ அப்படி இந்த படத்தில் பார்ப்பீர்கள் என்றும் கூறியிருக்கிறார்.

sai
அது மட்டுமல்ல சிங்கம் படத்திற்குப் பிறகு இந்தப் படம் தான் கூரையை பிச்சிக்கிட்டு போகும் படமாக இருக்கும் என்றும் சாய் அபயங்கர் தெரிவித்திருக்கிறார். சூர்யாவின் படம் என்றாலே பில்டப்புக்கு குறைவு இருக்காது. அதைப்போல இந்த கருப்பு திரைப்படத்தைப் பற்றியும் சாய் அபயங்கர் மிகப்பெரிய அளவில் பில்டப் செய்து இருக்கிறார். இந்த படமாவது சூர்யாவை தூக்கி நிறுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.