Dhanush : அனிருத் To ஏ.ஆர்.ரஹ்மான்.. தனுஷின் அடுத்த 4 படங்களின் இசையமைப்பாளர்கள் லிஸ்ட்!...
கோலிவுட்டில் உள்ள முக்கிய நடிகர்களில் தனுஷும் ஒருவர். துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமாகி தொடர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஒல்லியான தேகம், பக்கத்து வீட்டு பையன் போல முகம் என ரசிகர்களிடம் கனெக்ட் ஆனார். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆடுகளம், கர்ணன், வட சென்னை, அசுரன் போன்ற முக்கிய படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து இந்திய அளவில் கவனிக்கத்தக்க நடிகராக மாறியிருக்கிறார். மூன்று முறை தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாறி பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார்.

இவர் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் ஒரு ஃபீலிங் குட் படமாக அமைந்து பெரிய வசூலை பெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு வசூலை பெற்றது. தனுஷின் படங்களில் பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இட்லி கடை படத்தில் கூட ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. இந்நிலையில் தனுஷ் அடுத்தடுத்து நடிக்கவுள்ள 4 திரைப்படங்களில் யார் இசையமைப்பாளர் என்கிற லிஸ்ட்டை பார்ப்போம்.
அடுத்து அதாவது தனுஷின் 54வது படமாக உருவாக இருக்கும் படத்தை போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அடுத்து தனுஷின் 55வது படத்தை அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவிருக்கிறார்.
அடுத்து தனுஷின் 56வது படத்தை மாரி செல்வராஜ் இயக்கவிருக்கிறார். சரித்திர படமாக படம் உருவாகவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார். அடுத்து தனுஷின் 57வது படத்தை லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சைமுத்து இயக்க இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். பல வருடங்களுக்கு பின் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அதன்பின் தனுஷின் படங்களுக்கு அனிருத் இசை அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
