Good Bad Ugly: குட் பேட் அக்லி படம் லாபமாம்!.. அப்படி ஒரு உருட்டு... இப்படி ஒரு உருட்டு!..

மைத்ரி மூவி மேக்கர்ஸ்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான படம் குட் பேட் அக்லி. ஆந்திராவை சேர்ந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. கடந்த 10 வருடங்களில் தெலுங்கு சினிமாவில் பல முக்கியமான பெரிய படங்களை இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது. குறிப்பாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி 1800 கோடி வசூல் செய்த புஷ்பா 2 படத்தை தயாரித்தது இந்நிறுவனம்தான். இந்த படம் தியேட்டர் ஓனர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை கொடுத்தாலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு 70 கோடி வரை நஷ்டம் என அப்போதே செய்திகள் வெளியானது.
இளையராஜா வைத்த ஆப்பு: அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் தனது 3 பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிராக இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஓடிடியிலிருந்து படத்தை தூக்கி விட்டார்கள். இதனாலும் தயாரிப்பாளருக்கு 50 கோடி வரை நஷ்டம் என சொல்லப்பட்டது. எனவே குட் பேட் அக்லி படத்தை தயாரித்ததால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு 100 கோடிக்கும் மேல் நஷ்டம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
பிரதீப்பின் Dude: தற்போது இந்த நிறுவனம் பிரதீப் ரங்கநாதனை வைத்து Dude படத்தை தயாரித்துள்ளது இப்படம் வருகிற 17-ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் புரமோஷன் விழாவில் பேசிய மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் எர்னேனி ‘குட் பேட் அக்லி அதிக லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் இல்லை. தமிழில் நாங்கள் தயாரித்த முதல் படமே பிளாக்பஸ்டர்தான். கண்டிப்பாக அஜித் சாரோடு இணைந்து மீண்டும் படங்களை தயாரிப்போம்’ என பேசி இருந்தார்.
பொதுவாக ஒரு படம் நஷ்டம் என்றாலும் சினிமா மேடைகளிலும், பேட்டிகளிலும் தயாரிப்பாளர்கள் உண்மையை சொல்ல மாட்டார்கள். ஏனெனில் உண்மையை சொல்லிவிட்டால் அந்த நடிகர் அந்த தயாரிப்பாளருக்கு மறுபடி கால்ஷூட் கொடுக்க மாட்டார். எனவேதான் தயாரிப்பாளர் இப்படி பேசி இருப்பார் என கணிக்கப்படுகிறது.
அஜித்திடம் சொன்ன நஷ்ட கணக்கு: ஏற்கனவே மைத்ரி மூவிஸ் நிறுவனம் சார்பில் கார் ரேஸில் இருந்த அஜித்தை நேரில் சந்தித்து ‘குட் பேட் அக்லி படத்தால் எங்களுக்கு இவ்வளவு கோடி நஷ்டம். மீண்டும் எங்களுக்கு கால்ஷீட் கொடுங்கள்’ என கோரிக்கை வைத்ததாக ஏற்கனவே செய்திகள் கசிந்தது.அதேநேரம் மீண்டும் இவர்களின் தயாரிப்பில் நடித்தால் நஷ்ட கணக்கு காட்டி தனது சம்பளத்தில் கைவைப்பார்கள் என யோசித்த அஜித் ‘பார்க்கலாம்’ என சொல்லி நழுவி விட்டதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.