நாக சைதன்யா, சமந்தா விவகாரத்தில் லேடீ மினிஸ்டருக்கு அடுத்து வந்த கண்டனம்... யாரு தெரியுதா?

by sankaran |
Naga saithanya samantha sureka
X

தெலுங்கு திரையுலகில் நாக சைதன்யா- சமந்தா விவாகரத்து விஷயம் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அதிலும் தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா கூறியது கடும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அவர் என்ன சொன்னார் என்றால் சமந்தாவின் விவாகரத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராமராவ் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு திரைத்துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் வந்தன.

முதலாவதாக ஜூனியர் என்டிஆர் தனது கருத்தைப் பதிந்து இருந்தார். அதில் கொண்டா சுரேகா தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுக்கு இழுப்பது தரம் தாழ்ந்த செயல் என்று தெரிவித்து இருந்தார். அது மட்டுமல்லாமல் உங்களைப் போன்ற பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் தனி நபர்களின் முடிவுகளுக்கும், அவர்களின் உரிமைகளுக்கும் மரியாதை அளிக்க வேண்டும். பொதுவாக திரையுலகைப் பற்றி ஆதாரமற்ற அறிக்கைகளை அலட்சியமாகத் தருவது வருத்தம் அளிக்கிறது என்றார்.

தொடர்ந்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், திரைப்பட நடிகர்கள் அவர்களின் குடும்பத்தினர் குறித்து பேசப்படும் ஆதாரமற்ற மற்றும் இழிவான கருத்துகளை நான் கண்டிக்கிறேன். இது மிகவும் அவமரியாதைக்குரியது.


இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அரசியல் கட்சிகள் அதிக பொறுப்புடனும், தனிமனித சுதந்திரத்தை மதிக்கும் வகையிலும், குறிப்பாக பெண்கள் விஷயத்தில் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமந்தாவும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளது பரபரப்பாகி உள்ளது. அவர், திரைத்துறையில் பல சிரமங்களைக் கடந்து ஒரு பெண்ணாக போராடிக் கொண்டு இருக்கிறேன். என்னுடைய விவாகரத்து பரஸ்பரமானது. உங்கள் கருத்துக்களை உடனே திரும்ப பெற வேண்டும். உங்களின் அரசியல் சண்டையில் என் பெயரை இழுக்க வேண்டாம். அரசியலுக்கு அப்பாற்பட்டே இருக்கிறேன் என சமந்தா மனம் வெதும்பி பேட்டி கொடுத்துள்ளார்.

தொடர்ந்து வந்த அதிரடி கண்டனங்களின் எதிரொலியாக தற்போது சமந்தா பற்றி வாய் தவறி பேசிவிட்டேன். திரைத்துறையினர் குறித்த தனது கருத்துக்கு மன்னிப்புக் கோருவதாகவும் தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா பேட்டி கொடுத்துள்ளார். அதே நேரம் கேடிஆர். குறித்த எனது கருத்தைத் திரும்பப் பெற மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story