Nanjil Vijayan: எனக்கு புடிக்கல! அவாய்டு பண்ணிட்டேன்.. திருநங்கை பற்றி நாஞ்சில் விஜயன் விளக்கம்
Nanjil Vijayan: விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் நாஞ்சில் விஜயன். தற்போது அவரைப் பற்றிய புகார் ஒன்றை திருநங்கைவிஜே வைஸு முன் வைத்திருக்கிறார். அதாவது பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் வைஷு. இது மிகப்பெரிய அளவில் பூகம்பமாக வெடித்திருக்கிறது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று விஜய் டிவியில் காமெடி நடிகர்களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் நாஞ்சில் விஜயன்.
இவர் திரைப்படங்களிலும் பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்ல சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார். அவ்வப்போது தனது மனைவியுடன் ரீல்ஸ் வீடியோக்களை போட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் விஜே வைஸு தன்னுடன் பல ஆண்டுகளாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து தன்னை காதலிப்பதாக கூறி இப்போது என்னை ஏமாற்றி விட்டதாக அவர் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். இதைப்பற்றி நாஞ்சில் விஜயன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் காணொளி மூலம் ஒரு பெரிய விளக்கத்தையே கொடுத்திருக்கின்றனர்.
அதாவது இந்த மாதிரி பிரச்சனைகள் வரும் பொழுது அதை கடந்து போய்விடலாம் என்று தான் நான் இருந்தேன். ஆனால் அதைத் தொடர்ந்து நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. சில பேர் நெருப்பில்லாமல் புகையுமா என்றெல்லாம் கேட்கின்றனர். என்னுடைய குடும்பத்திற்கும் என் நண்பர்களுக்கும் என்னுடன் வேலை பார்ப்பவர்களுக்கும் என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். இருந்தாலும் இவர் இந்த மாதிரி எல்லாம் செய்திருப்பாரோ என்றெல்லாம் கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்து வருகின்றன. அதற்கான பதிலை தான் நான் இப்போது கொடுக்கப் போகிறேன்.
நாங்கள் சந்தோஷமாக இருக்கிறது உங்களுக்கு பிடிக்கவில்லையா ? இப்பொழுதுதான் என்னுடைய கணவர் ஒவ்வொரு பிரச்சனையிலிருந்து மீண்டு வருகிறார். இந்த சமயத்தில் நீங்கள் இந்த மாதிரி செய்தால் என்ன பண்ணுவது என அவருடைய மனைவி வைஸுவை பார்த்து கேள்வி எழுப்பி இருக்கிறார். அது மட்டுமல்ல தங்களால் வெளியில் தலை காட்ட முடியவில்லை என்றும் ஒரு செகண்டில் எப்படி நீங்கள் செய்துவிட்டு போய் விட்டீர்கள் என்றும் இதனால் அவருக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன பண்ணுவது என்றெல்லாம் அவருடைய மனைவியும் கேட்டிருக்கிறார்.
நாஞ்சில் விஜயன் கூறும் பொழுது ஏன் இப்படி வைஸு செய்கிறார் என எனக்கு தெரியவில்லை. வாழ்க்கையில் ஒரு நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம். இறப்பு பகலாக ஓடி ஓடி உழைத்து எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். ஏற்கனவே ஒரு பிரச்சனை என் வாழ்க்கையில் வந்து விட்டு போய்விட்டது. அதிலிருந்து மீண்டு இப்போது என் குடும்பத்துடன் நான் சந்தோஷமாக இருக்கிறேன். இந்த நேரத்தில் ஏன் இப்படி செய்கிறீர்கள் என அந்த கடவுளுக்கு தான் தெரியும். என்மேல் அவர் ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். 11 வருடம் நாங்கள் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம் என அவர் கூறியிருக்கிறார்.
ஒரு வேளை அப்படி வாழ்ந்து இருந்தோம் என்றால் கீழே வீட்டு ஓனர் இருப்பார். ஒரு மூன்று அல்லது நான்கு வருடம் ஒரு பையன் இந்த வீட்டுக்கு வருவதும் போவது மாதிரி இருக்கிறான் என்றால் நிச்சயமாக அந்த வீட்டு ஓனருக்கு தெரியும். இரண்டாவது விஷயம் என்னவெனில் அவரை நான் சின்சியராக காதலித்தேன் எனக் கூறியிருக்கிறார். இது உங்களுக்கு மனசாட்சி இருந்தால் எப்படி இதை சொல்லி இருக்கிறீர்கள் என தெரியவில்லை. ஏனெனில் அவரை நான் ஒரு தோழியாக ஒரு சகோதரியாகத்தான் நினைத்திருக்கிறேன். நான் உத்தமன் என சொல்லவில்லை .
ஒரு சாதாரண மனிதன் தான். ஒரு சாதாரண பழக்கமாகத்தான் எங்களுக்குள் இருந்தது. ஆனால் அந்த பழக்கம் ஒரு லெவலுக்கு மேல் போகும் பொழுது வைஸு ஒருநாள் திடீரென என்னிடம் வந்து காதலை வெளிப்படுத்துவது மாதிரி பேசினார். திருமணத்திற்கு முன்னாடியே இது நடந்தது. ஆனால் எனக்கு இது துளி கூட விருப்பமில்லை. அதை அவரிடமே தெளிவாக சொல்லிவிட்டேன். நீங்கள் திருநங்கை என நான் புறக்கணிக்கவில்லை. எனக்கு பிடிக்கவில்லை .எனக்கு இஷ்டமில்லை .
வேலையில் தான் என்னுடைய கவனம் இருக்கிறது என சொல்லி அப்பவே அவரை தவிர்த்து விட்டேன். திருமணத்திற்கு பிறகும் எனக்கு நிறைய போன் கால்கள் வந்து கொண்டிருக்கின்றன. மிட்நைட்டில் நிறைய கால் செய்து இருக்கிறார். திருமணத்திற்கு முன்பு பேச்சுலர் வாழ்க்கை. ஆனால் திருமணத்திற்கு பின்பு இதை என்னுடைய மனைவி எப்படி அனுமதிப்பார்? அதனால் என் மனைவியும் பல முறை அவரை திட்டி இருக்கிறார்.
இந்த மாதிரி தொடர்ந்து என்னை டார்ச்சர் செய்து கொண்டே இருக்கும் பொழுது தான் என்னுடடைய இன்ஸ்டாகிராம் whatsapp என அவருடைய நம்பரை எல்லாம் பிளாக் செய்து எனக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தேன். மூன்றாவது குற்றச்சாட்டு என்னவெனில் அவர்தான் எங்களுக்கு திருமணமே செய்து வைத்து விட்டதாக சொல்லி இருக்கிறார் .
இதை எப்படி அவர் சொல்லி இருக்கிறார் என தெரியவில்லை. எங்களை சுற்றி ஒரு சமூகமே இருக்கிறது. அவர்கள் எல்லோருமே எங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான் என்னுடைய மனைவியை எப்படி திருமணம் செய்தேன் என்பது எனக்கு தான் தெரியும். கஷ்டப்பட்டு திருமணம் செய்தேன். அவர்தான் எனக்கு திருமணம் செய்து வைத்தார் என்றால் ஏன் அவர் எங்களுடைய திருமணத்திற்கு வரவில்லை என பல கேள்விகளை நாஞ்சில் முன் வைத்திருக்கிறார்.
