கோமால இருந்து கண் திறந்ததும் என் பையன் சொன்ன வார்த்தை.. கண்கலங்கிய நாசர்!..
நடிகர் நாசர்: தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களை இயக்கி வந்த நாசர் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும், குணசித்திர நடிகராகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார். அதிலும் இவர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருகின்றார். தற்போது வரை சினிமாவில் நடித்துவரும் நாசர் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகின்றார்.
நடிகர் நாசரின் மனைவி கமீலா. இந்த தம்பதிகளின் மூத்த மகன் நூருல் ஹசன் ஃபைசல். இவருக்கு நடிகர் விஜய் என்றால் மிகவும் பிடிக்குமாம். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வந்திருக்கின்றார். சிறு வயது முதலே நடப்பது ,பேசுவது என அனைத்துமே அவரைப் போலவே செய்து வந்திருக்கின்றார். பின்னர் அவருக்கு விபத்து ஏற்பட்டு கோமாவுக்கு சென்ற நிலையில் தீவிர சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்து சென்று இருக்கின்றார்.
கோமாவில் இருந்து சுயநினைவுக்கு திரும்பியதும் அம்மா அப்பாவை தேடாமல் நடிகர் விஜயின் பெயரை சொல்லினாராம். இது குறித்து அவர் பேசுகையில் 'என் மகன் ஒரு கேம் டிசைனர். அவருக்கு விஜய் என்றால் மிகவும் பிடிக்கும். சைவம் என்கின்ற கேமை அவர்தான் டிசைன் செய்தார். அந்த கேம் ரிலீஸ் செய்த அடுத்த நாள் அவருக்கு விபத்து ஏற்பட்டது. அப்போது 14 நாட்கள் சுயநினைவு இல்லாமல் இருந்தார்.
சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் சென்றேன். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுத்த நிலையில் சுயநினைவு திரும்பியது. அப்போது அம்மா அப்பான்னு அவர் சொல்லல.. அதற்கு பதிலாக விஜய் என்று சொன்னார். அவனுக்கு விஜய் என்கின்ற நண்பன் இருக்கின்றார். சரி அவரை வைத்து தான் சொல்கின்றார் என்று நினைத்து வரவழைத்தோம். ஆனால் அவர் எந்தவித ரியாக்ஷனும் கொடுக்கவில்லை.
அதன் பிறகு தான் புரிந்தது அவர் சொன்னது நடிகர் விஜயை என்று, பின்னர் தளபதி விஜயின் புகைப்படத்தை காட்டியதும் அவனது கண்கள் விரிவடைந்தது. அவனுக்கு விஜயின் நினைவு மட்டும் இருக்கின்றது என்பதை அறிந்து மிகவும் சந்தோஷப்பட்டேன். தொடர்ந்து விஜயின் படங்களையும் பாடல்களையும் அதிகமாக காட்டத் தொடங்கினோம். அப்போதுதான் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவு திரும்பியது.
ஒரு கட்டத்தில் இந்த விஷயம் நடிகர் விஜய்க்கு தெரிய வரவே உடனே என்னை அழைத்து நான் உங்கள் மகனை வந்து பார்க்கலாமா? என்று கேட்டார். நாங்கள் உங்களுக்கு எதற்கு சிரமம் என்று கூறினோம். ஆனால் நான் அவரை கண்டிப்பாக பார்க்கணும் என்று சொல்லி வந்தார். அதுவும் ஒருமுறை அல்ல பலமுறை வந்து பார்த்து இருக்கின்றார்.
அவர்கள் இரண்டு பேரையும் தனியாக விட்டுவிட்டு நாங்கள் அனைவரும் சென்று விடுவோம். அவர் என் மகனுடன் கொஞ்சம் நேரம் அமர்ந்து பேசுவார். அது மட்டுமில்லாமல் என் மகனுக்கு கிட்டார் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு ஒரு முறை அவருக்கு கிட்டாரை வாங்கி பரிசாக வழங்கினார்' என்று நெகிழ்ச்சியுடன் கூறி இருந்தார் நாசர்.