தேசிய கீதத்தை அவமதித்த நயன், விக்னேஷ் சிவன்… ஒரு நிகழ்ச்சிக்கு இத்தனை அட்டூழியங்களா?

by Akhilan |
nayanthara
X

Nayanthara: நயன்தாரா நடித்து வரும் ஃபெமி 9 இவெண்ட்டில் நடந்த அடுத்த ஒரு பிரச்னை குறித்து விஷயம் வெளியில் கசிந்து இருக்கிறது. இதை கேட்கும் பலர் உண்மையிலேயே இவங்க பிரபலம் தானா இப்படி நடந்துக்கிறாங்களே என்ற நிலைக்கு வந்துள்ளது.

பெமி9 என்பது எம்எல்எம் மாதிரியான ஒரு கம்பெனி. இதை நயன் நடத்துவதால் அவரின் பிரபல அந்தஸ்த்தை வைத்து ஆட்களை சேர்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஒரு ஆள் அவங்களுக்கு கீழ் இரண்டு பேர் என சேர்த்து விட வேண்டும்.

இப்படி சேர்ந்தவர்களுக்கு சமீபத்தில் ஒராண்டுக்கான பாராட்டு விழா நடந்துள்ளது. அதில் தான் பிரச்னையே வெடித்தது. முதலில் 9 மணிக்கு நயன் வருவார் எனக் கூறப்பட்ட நிலையில் அவர் 6 மணி நேரம் தாமதமாகவே நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறார்.

இதை தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்து இன்ப்ளூயன்சர்களுக்கு தனி மீட் நடத்தப்பட்டது. அதில் போட்டோ தானா அதுக்கு என்ன என்பது போல விக்னேஷ் சிவன் ஓவராக பில்டப் கொடுத்ததை அதில் கலந்துக்கொண்ட இன்ப்ளூயன்சர் வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.

ஆனால் தற்போது அவர் மிரட்டு பட்டு இருக்கிறாராம். வீடியோவை எடுக்க வேண்டும் என நயன் தரப்பு கூற அவர் முடியாது என்றாராம். அதற்கு என்ன வேண்டும் எனக் கேட்க போட்டோ எடுத்தக்கலாம் இல்ல இரண்டு வார உங்க சம்பளத்தை கொடுக்கலாம் எனவும் பேசி இருப்பதாக அவரே தன்னுடைய வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, அந்த நிகழ்ச்சி முடிந்து தேசிய கீதம் ஒலித்த போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நிற்காமல் நடந்து சென்றுள்ளனர். இதுவும் தற்போது வரிசையாக வெளியாக ரசிகர்கள் நயன்தாராவை வசைப்பாட தொடங்கி இருக்கின்றனர்.

Next Story