மூக்குத்தி அம்மன் 2 பூஜையில் நயன்தாரா செய்த அலப்பறை!.. பந்தா இன்னும் குறையலயே!...

Nayanthara: ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நயன்தாரா. அடுத்து ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். படிப்படியாக வளர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார். விஜய், அஜித், விக்ரம், சூர்யா, விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.
ராஜா ராணி திரைப்படம் இவரை முன்னணி நடிகையாக மாற்றியது. அதன்பின் நம்பர் ஒன் நடிகையாக மாறிய நயன்தாரா கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறினார். எல்லோருக்கும் ஒரு கோடிக்கு கீழ் சம்பளம் எனில் நயனுக்கு மட்டும் 10 கோடி சம்பளம் வாங்கினார்.
ஒருபக்கம், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடிக்க துவங்கினார். அதில் சில படங்கள் ஓடியது. பல படங்கள் தேறவில்லை. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாடகைத்தாய் மூலம் 2 குழந்தைகளுக்கும் அம்மாவாக மாறிவிட்டார்.

ஒருபக்கம், சமீபகாலமாக அவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் வெற்றி பெறுவதில்லை. இந்நிலையில்தான், சுந்தர்.சியின் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். பொதுவாக நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கே வரமாட்டார். ஆனால், மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையில் கலந்துகொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பட பூஜையில் நயன்தாரா, மீனா போன்ற சீனியர் நடிகைகளும் கலந்துகொண்டர். மேலும், நடிகை இந்த படத்தில் நடிக்கவுள்ள ரெஜினா கசந்த்ராவும் கலந்துகொண்டார். இந்த பூஜையில் கலந்துகொள்ள வந்த நயன்தாரா உள்ளே வராமல் கேரவான் உள்ளே போய்விட்டாராம்.
மேடையில் எல்லோரும் பேசிய பின் நயன்தாராவை அழைக்கும்போதே மெதுவாக, அதுவும் கொஞ்ச நேரமெடுத்து பொறுமையாக மேடைக்கு வந்து நின்றிருக்கிறார். இத்தனைக்கும் மேடையில் இருந்த மீனா, குஷ்பு எல்லாமே இவருக்கு சீனியர் நடிகைகள். நயனோ யாரையும் மதிக்கவில்லை. லேடி சூப்பர்ஸ்டார் என சொன்னால் மட்டும் போதாது.. பந்தாவையும் குறைச்சிக்கணும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.