தனுஷை மட்டுமல்ல ரஜினி படக்குழுவையும் ஏமாற்றிய நயன்… டாக்குமெண்ட்ரியில் இத்தனை பித்தலாட்டமா?
Nayanthara: நடிகை நயன்தாரா தன்னுடைய கல்யாண டாக்குமெண்ட்ரிக்காக தனுஷுக்கு எதிராக வெளியிட்ட கடிதம் வைரலான நிலையில், தற்போது இன்னொரு தயாரிப்பாளரையும் ஏமாற்றிய விஷயம் கசிந்து இருக்கிறது.
தமிழ் சினிமாவில் தனி நாயகியாக வெற்றி கண்டவர் நடிகை நயன்தாரா. ஆனால் அவருக்கு கடந்த சில படங்களாகவே சுமார் வசூல் கூட கிடைக்காமல் அல்லோலப்பட்டு கொண்டு இருக்கிறார். இதை தொடர்ந்து தன்னுடைய பிசினஸை வளர்க்க தொடங்கினார்.
அதன் ஒரு பகுதியாக தன்னுடைய கல்யாணத்தை நெட்பிளிக்ஸில் டாக்குமெண்ட்ரியாக விற்பனை செய்தார். 40 கோடிக்கும் அதிகமான வியாபாரம் எனக் கூறப்படுகிறது. படம் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் கழிந்து அதுகுறித்து அறிவிப்பு வரவில்லை.
கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் நயனின் பிறந்தநாள் தினத்தில் வெளியிட இருப்பதாக அறிவிப்பு வந்தது. ஆனால் அதற்கு இரண்டு நாட்கள் முன்னர் தனுஷ் தரப்புக்கு நயன் ஒரு கடிதம் எழுதி இன்ஸ்டாவில் வெளியிட்டார். அதில் தனுஷை நெப்போட்டிசம் புராடக்ட் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
தன்னுடைய கணவருடன் தான் இணைந்த முதல் படமான நானும் ரவுடித்தான் படத்தின் காட்சிகளுக்கு என்ஓசி கொடுக்காமல் இருப்பதாகவும், அந்த காட்சிகளை நீக்காமல்விட்டால் 10 கோடி அபராதம் கேட்டும் நோட்டீஸ் விட்டு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். அந்த நோட்டீஸை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.
இதில் பிரபலங்கள் சிலர் நயனுக்கு சப்போர்ட் பண்ணியதாக காட்டிக்கொண்டாலும், ரசிகர்களின் ஆதரவு தனுஷுற்கே இருந்தது. நீங்களும் காசுக்கு தானே விற்பனை செய்றீங்க. அவர் கேட்கிறதுல என்ன தப்பு இருக்கு என ரசிகர்களும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இருந்தும் தன்னுடைய கல்யாண டாக்குமெண்ட்ரியில் அந்த காட்சிகளை நீக்காமல் வெளியிட்டார். இதை தொடர்ந்து தனுஷ் தரப்பு வழக்கு தொடர நயன்- விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் விடப்பட்டுள்ளது. தற்போது இன்னொரு பிரச்னை வெடித்துள்ளது.
சந்திரமுகி படத்தின் காட்சிகளையும் நயன் டாக்குமெண்ட்ரியில் ஒப்புதல் வாங்காமல் பயன்படுத்தி இருக்கிறாராம். இதனால் தயாரிப்பு குழு தற்போது அவருக்கும் நோட்டீஸ் விட்டு 5 கோடி அபராதமாக கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மீண்டும் நயன் இதற்கு என்ன பதில் சொல்லுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.