Nayanthara: சும்மா இருக்க முடியாதே! ஒரு புகைச்சலை கிளப்புவோம்.. நயனின் வீடியோவை பாத்தீங்களா?

Nayanthara: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பல நாட்களாக அமைதியாக இருக்கும் நிலையில் தற்போது தீபாவளியை முன்னிட்டு வெடியை வைத்து மீண்டும் வைரல் ஆகிவருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நயன்தாரா. அவர் பிரபல இயக்குனருடன் காதல் வலையில் இருந்த போது கூட லேடி சூப்பர்ஸ்டார் எனப் ரசிகர்களிடம் நல்ல பெயரை வாங்கி கோலிவுட்டில் டாப் லிஸ்ட்டில் இருந்தார். ஆனால் திருமணம் எல்லாத்தையும் மாற்றியது.
தொடர்ச்சியாக அவர் நடிக்கும் எல்லா படங்களுமே தோல்வியிம் முடிந்தது. கோலிவுட்டில் தன்னுடைய இடத்தினை இழந்தார். இதனால் நடிப்பை தனியாக தள்ளி பிசினஸ் பக்கம் தன்னுடைய கவனத்தை மாற்றினார். அதிலும் அடிக்கடி வைரல் சிக்கலில் சிக்கி விமர்சிக்கப்பட்டார்.
அடிக்கடி கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஊர் சுற்றி புகைப்படங்களை வெளியிட்டு நான் இருக்கேன் என்பதை மறக்காமல் வைத்து இருக்கிறார். அந்த வகையில் அம்மணி தற்போது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழித்து வருகிறார். மூக்குத்தி அம்மன் 2 படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
அவர் கணவர் விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே படத்தை இயக்கி இருக்கிறார். பிரதீப் ரங்கநாதன், சீமான் நடிப்பில் உருவாகும் இப்படம் கடைசிக்கட்ட படப்பிடிப்புகளை முடித்து தீபாவளி தினத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், டியூட் படம் தீபாவளிக்கு வெளியாக இருந்ததால் இரண்டு தயாரிப்பு நிறுவனமும் இணைந்து டியூட் படத்தை தீபாவளி தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தீபாவளி நெருங்குவதை தொடர்ந்து பிரபலங்கள் கொண்டாட்டங்களாஇ தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், திருநங்கையிடம் தம்பதியாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சேர்ந்து நின்று ஆசீர்வாதம் வாங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் குழந்தைகள் இல்லாமல் இருந்ததால் வேறு மாதிரியாக சர்ச்சையையும் கிளப்பி விட்டுள்ளது.