நான் விக்கியை கல்யாணம் செய்திருக்க கூடாது!.. ஃபீல் பண்ணி பேசும் நயன்தாரா!...
Nayanthara: ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நயன்தாரா. இவரின் சொந்த மாநிலம் கேரளா. அங்கு டிவியில் தொகுப்பாளராக கூட வேலை செய்திருக்கிறார். ஒரு புத்தகத்தில் இவரின் புகைப்படத்தை பார்த்து ஐயா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனவே, சென்னை வந்தார்.
அதன்பின் சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். சில வருடங்கள் அவருக்கு சரியான வாய்ப்பு வரவில்லை. அதோடு, குண்டான தோற்றத்திலும் இருந்தார். ஒரு கட்டத்தில் எடையை குறைத்து சிக்கென மாறினார். பில்லா படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி காட்டி அதிர வைத்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தனுஷின் தயாரிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார்.
சில வருடங்கள் இருவரும் காதல் ஜோடிகளாக சுற்றி வந்துவிட்டு 2 வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டனர். அதன்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கும் பெற்றோராக மாறினார்கள். சினிமா தயாரிப்பது, வினியோகம் செய்து. புதுப்புது தொழிலில் முதலீடு செய்வது என பல விஷயங்களையும் செய்து வருகிறார்கள்.
நயன்தாராவுக்கு உறுதுணையாக அவரின் கணவர் விக்னேஷ் சிவன் இருக்கிறார். சமீபத்தில் கூட நயன்தாராவுடன் இணைந்து தனுஷுடன் சண்டை போட்டார் விக்னேஷ் சிவன். ஒருபக்கம் நயன் சினிமாவில் நடிக்க விக்கியோ திரைப்படங்களை இயக்கி வருகிறார். இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்.ஐ.கே என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய நயன்தாரா மனம் விட்டு பல விஷயங்களையும் பேசியிருந்தார். சில நேரங்கள் நாங்கள் ஒருவரும் ஒன்றாக இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். எனக்கு எப்போதும் அந்த குற்ற உணர்வு இருக்கிறது. இந்த உறவுக்குள் அவரை (விக்கி) இழுத்தது நான்தான். முதல் படி வைத்ததும் நான்தான். நான் இல்லையென்றால் அவருக்கு சொந்தமாக ஒரு பெயர் இருந்திருக்கும். அதுவே அவரின் அடையாளமாக இருந்திருக்கும்.
இயக்குனர், பாடலாசிரியர், எழுத்தாளர் என அவருக்கு கிரெடிட் கொடுத்திருப்பார்கள். அவர் மிகவும் நல்லவர். அது எனக்கு தெரியும். ஆனால், அவரை போல என்னால் நன்றாக இருக்க முடியுமா என தெரியவில்லை. ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் சில சமயங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் வெறுப்பு காரணமாக காணாமல் போய்விடுகிறது. ஒருவர் அவருக்கு சமமாக வெற்றி பெற்றவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எல்லோரும் நினைக்கிறார்கள். அதற்கு அவசியம் இல்லை. நாங்கள் அன்பை தேர்ந்தெடுத்தோம். என்னையும், அவரையும் ஒப்பிட்டு பேசுவது நியாயமே இல்லை’ என ஃபீலிங் காட்டியிருக்கிறார்.