விஜயாக ஆசைப்படும் நயன்... போஸ் கொடுத்தா மட்டும் போதாது…

by Akhilan |
Nayanthara
X

Nayanthara: நடிகை நயன்தாரா சமீபகாலமாகவே தன்னுடைய எல்லா செயல்பாடுகளையும் இன்ஸ்டாவில் கொட்டிவிடுகிறார். இதற்கு பின்னால் தற்போது ஒரு பெரிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நடிகை அஜித்தை போல இருந்தவர் நயன்தாரா. எந்த வித புரோமோஷனுக்கும் வர மாட்டார். தன்னுடைய படம் குறித்து பேச மாட்டார். சமூக வலைத்தள பக்கங்களிலும் இல்லாமல் இருந்து வந்தார். ஆனால் அது அவர் திருமணத்திற்கு பின் உடைந்துள்ளது.

நடிகை நயன் முதல்முறையாக இன்ஸ்டா பக்கத்தினை திறந்த போது பலரும் ஆச்சரியமாக பார்த்தனர். ஆனால் அதற்கு பின்னால் ஒரு பிளானே இருந்தது. சினிமாவில் நடிகை திரிஷா இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய காலம் நயன் தன்னுடைய மார்க்கெட்டை இழந்த காலம் அது.

இதனால் உடனே தொடர்ச்சியாக பிசினஸையும் தொடங்கினார். அதன் விளம்பரங்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டார். அவர் நடித்த படத்தினை இன்ஸ்டாவில் புரோமோட் செய்ய கேட்டால் கூட அதற்கு பெரிய தொகையை கேட்பதாகவே கூறப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் மற்ற கிரியேட்டர்கள் போல போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இதை தொடர்ந்து சமீபத்தில் அம்மணி தன்னுடைய femi9 நிறுவனத்தின் வெற்றிவிழாவை கோலாகலமாக கொண்டாடினார்.

அதில் இருவரும் செய்த சேட்டை ஒரு பக்கம் என்றாலும் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு மாஸ் காட்டிவிட்டதாக நினைத்து கொள்கிறார். ஆனால் இது எல்லாமே அம்மணி அடுத்து செய்ய இருக்கும் பிளானுக்காக எனக் கூறப்படுகிறது.

நயன் தொடர்ச்சியாக பிசினஸில் ஆர்வம் காட்டவே முடிவெடுத்து இருக்கிறாராம். இதற்காகவே சமீபத்தில் தொடர்ச்சியாக தன்னை பற்றி பேச வைத்துள்ளாராம். அதுமட்டுமல்லாமல் இறங்கி சில விமர்சகர்கள் குறித்து பேசியதும் இதற்காக தானாம்.

நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தாலும் பரவாயில்லை. தன்னை பற்றியே பேசிக்கொண்டு இருந்தால் அது தன்னுடைய பிசினஸுக்கும் லாபமாக இருக்கும் என்பது அம்மணியின் எண்ணமாகி இருக்கிறதாம். இன்னும் சில விஷயங்களை விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story