தனுஷ் நீங்க பிஸிதான்!. போன எடுக்க மாட்டீங்களா?!.. கோபப்பட்டதன் காரணம் சொன்ன நயன்!..

by Ramya |   ( Updated:2024-12-12 06:00:11  )
nayanthara
X

nayanthara 

நடிகை நயன்தாரா:

தென்னிந்திய சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைபயணத்தை தொடங்கிய நடிகை நயன்தாரா தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்திருக்கின்றார் நடிகை நயன்தாரா.

விக்னேஷ் சிவன் திருமணம்:

நானும் ரவுடிதான் என்கின்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.


இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்ட நயன்தாரா கணவர், குழந்தை, சினிமா என்று படு பிஸியாக இருந்து வருகின்றார்.

தனுஷுடன் பிரச்சனை:

நடிகை நயன்தாரா கடந்த மாதம் நடிகர் தனுஷ் குறித்து மூன்று பக்கத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. நயன்தாராவின் டாக்குமென்டரி படத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து மூன்று வினாடி காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்பதாக காட்டமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் நயன்தாரா தரப்பில் இருந்து விளக்கம் கொடுப்பதற்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. நயன்தாரா வெளியிட்டிருந்த அறிக்கையானது சமூக வலைதள பக்கங்களில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

நயன்தாரா பேட்டி:

சமீபத்தில் நடிகை நயன்தாரா வட இந்தியா சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்து இருந்தார். அந்த பேட்டியில் தனுஷ் குறித்து அப்படி ஒரு அறிக்கை வெளியிட்டதற்கான காரணம் என்ன என்பதை ஓபனாக பேசியிருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'நான் செய்யும் செயல் எனக்கு சரி என தோன்றும்போது நான் ஏன் மற்றவர்களை பார்த்து பயப்பட வேண்டும். பலரும் என்னுடைய படத்தை சேல் பண்ணுவதற்காக நான் செய்த பிஆர் ஸ்டண்ட் என்று கூறி வருகிறார்கள்.

ஆனால் அதெல்லாம் கிடையாது. எங்கள் காதல் அறிமுகமான இடத்தையும், அந்த தருணத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அந்த காட்சியையும் பாடல் வரிகளையும் பயன்படுத்தினோம். நான்கு வரிகளுக்காக இப்படி ஒரு வழக்கு நிச்சயம் தேவையா?

நடிகர் தனுசை சந்தித்து பேசுவதற்கு நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அவரின் நண்பர்கள் மூலமாக முயற்சித்தாலும் நடக்கவில்லை. ஒரு போன் கால் பண்ணி பேசியிருந்தா? என்ன பிரச்சனை இதை எப்படி சரி செய்யலாம் என பேசி தீர்த்து இருந்திருக்கலாம். அதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்காமல் இப்படி மோசமாக நடந்து கொண்டது மனதளவில் என்னை பாதித்தது.


இவ்வளவு பெரிய நடிகர் ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருக்கக் கூடிய தனுஷ் இப்படி ஒரு செயலை நிச்சயம் செய்ய வேண்டுமா? நாங்கள் சிறந்த நண்பர்களாக இருந்தோம். ஆனால் திடீரென்று என்ன ஆனது தெரியவில்லை. போன் காலை கூட எடுத்து பேசுவதற்கு அவரால் முடியவில்லை. தனது ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சிக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதனால் தான் இப்படி ஒரு கடிதம் எழுதினேன்' என்று விளக்கம் அளித்துள்ளார்.

Next Story