விக்கியோட செம ரொமான்ஸ்!. ஃபாரின் டூர் போட்டைவை ஷேர் செய்த நயன்தாரா!..
Nayanthara: சொந்த மாநிலம் கேரளா என்றாலும் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறியவர் நயன்தாரா. ஐயா படத்தில் நடிக்க துவங்கி 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். துவக்கத்தில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ராஜாராணி திரைப்படம் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது.
அஜித்தின் பில்லா படத்தில் பிகினி உடையில் வந்து அதிரவைத்தார். விஜயுடன் வில்லு, பிகில் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அஜித்துடன் ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஒருபக்கம், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள நெற்றிக்கண், அன்னப்பூரணி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
சிம்பு, பிரபுதேவா என இவரின் காதல் எல்லாம் பிரேக்கப் ஆனது. அதன்பின் தனுஷின் தயாரிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும்போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரும் சில வருடங்கள் காதலர்களாக உலகை சுற்றி வந்தார்கள்.
அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிடுவார்கள். 2 வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணமும் செய்து கொண்டார்கள். மேலும், வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகவும் மாறினார்கள். சில நாட்களுக்கு முன்பு தனது திருமண ஆவண படம் தொடர்பாக தனுஷுடன் சண்டையும் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் சென்றார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ‘இது ஒரு சிறந்த விடுமுறை நாளாக அமைந்தது. பிறந்தநாளை கொண்டாட இங்கேதான் வருவோம். இந்தமுறை குழந்தைகளுடன்’ என இன்ஸ்டாகிராமில் உருகியிருக்கிறார்.