10 வருஷத்துல மூணு ஹிட்டு தான்... அதுக்கு இவ்ளோ அக்கப்போறா? பொளந்து கட்டிய பிரபலம்

by Sankaran |
nayanthara
X

சமீபத்தில் மானிட்டர் கேட்டு சர்ச்சையில் சிக்கி இருந்தார் நயன்தாரா. தனுஷ் உடன் திருமண ஆவணப்படம் வீடியோ விவகாரம்னு பல சர்ச்சைகள் அவருக்குத் தொடர்கிறது.

இந்த நிலையில் வலைப்பேச்சாளர்களை 'குரங்கு'ன்னு சொல்லி கட்டி வாங்கிக் கொண்ட நிகழ்வும் நடந்துள்ளது. நயன்தாரா குறித்து தற்போது பிஸ்மி ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். அது இதுதான்.

நயன்தாராவுக்கு சமீபகாலமாக வெற்றிப்படங்கள்னு எதுவுமே வரல. கடந்த 10 வருஷத்துல நயன்தாரா கொடுத்த ஹிட் எத்தனைன்னு தெரியுமான்னு பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி சொல்கிறார். என்னன்னு பார்க்கலாமா...

ஏற்கனவே புரொமோஷனுக்கு வர மாட்டேன்னு கண்டிஷன் போடும் நடிகைக்கு 10 கோடி சம்பளம் கொடுக்குறதே மிகப்பெரிய கேவலம். அதையே தொடர்ந்து பண்ணிக்கிட்டும் இருக்கீங்க.


அப்படி இருக்கும்போது இப்படி ஒரு விஷயத்தை எப்படி பண்றது? நயன்தாராவுக்கு அந்த அளவுக்கு மார்க்கெட்டும் இல்ல. நானும் ரௌடிதான், மூக்குத்தி அம்மன்னு ரெண்டு படம்.

இப்படி கடந்த 10 ஆண்டுகள்ல அவங்க கொடுத்த கமர்ஷியல் ஹிட் ரெண்டு அல்லது மூணு படம்தான். அவரை வைத்துப் படம் எடுத்த இயக்குனர்கள் எல்லாம் எங்கே போனாங்க? அறம்னு வெற்றிப்படம் கொடுத்த இயக்குனரே காணாமல் போய்விட்டார்.

அன்னபூரணின்னு ஒரு படம். லாப நட்டம் என்னன்னு அந்தப் படத்தயாரிப்பாளர போய் கேளுங்க. இதுக்கு மேலயும் நயன்தாராவை வச்சி படம் எடுக்காருன்னா அவரை நாம என்னன்ன சொல்ல முடியும்? அவ இப்படி வரிசையா நிறைய சொல்லிக்கிட்டே போகலாம் என்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.

நானும் ரௌடிதான் படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்தார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2015ல் வெளியானது. தனுஷ் தயாரித்தார். படம் ஹிட் அடித்தது.


அறம் படத்தையும் இதனுடன் சொல்லலாம். 2017ல் கோபி நைனார் இயக்கிய படம் அறம். ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கியது.

ஆர்.ஜே.பாலாஜியுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார். படத்தின் இயக்குனர்கள் ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன். 2020ல் வெளியானது. படம் சூப்பர்ஹிட் ஆனது.

அன்னபூரணி படத்துக்கப் பிறகு ராக்காயி என்ற படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். சமீபத்தில் இவர் ஊடகம் ஒன்றுக்கு ரஜினி குறித்து பேசியுள்ளார். அதில் சந்திரமுகி படத்தில் நடிக்கும்போது ரஜினி எவ்ளோ பெரிய ஆளுன்னு எனக்குத் தெரியாது. அதனால பயம் இல்லாம நடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story