போலீஸ் டிரெஸ்ஸுக்கு நோ!. நயன்தாராவின் செண்டிமெண்ட்!.. நல்லா சிக்கிட்டாரு சுந்தர்.சி...

by MURUGAN |
nayanthara
X

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தவர். ஐயா படத்தில் நடிக்க வரும்போது ஆம்னி பஸ்ஸில் வந்தவர் இப்போது எங்கு போனாலும் தனி விமானம் மூலம் செல்லும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்.

ரஜினி, விஜய், அஜித், விஜய் சேதுபதி, சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்து நம்பர் ஒன் நடிகையாகவும் மாறினார். அதோடு, கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறினார். ஒருகட்டத்தில் படத்தின் டைட்டில் தன் பெயருக்கு முன் லேடி சூப்பர்ஸ்டார் என போட வேண்டும் எனவும் அலப்பறை செய்தார்.

இவரின் வளர்ச்சி பல நடிகைகளுக்கும் பொறாமையை ஏற்படுத்தியது. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும், வாடகைத்தாய் மூலம் 2 குழந்தைகளுக்கும் அம்மாவாக மாறினார். இப்போது நம்பர் ஒன் நடிகையாக மாறினாரோ அப்போது முதலே நடிப்பதற்கு பல கண்டிஷன்களையும் போட துவங்கினார் நயன்தாரா. படத்தின் புரமோஷன் விழாவுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்தே போடுவார்.


இப்போது திருமணத்திற்கு பின் சென்னையில் மட்டுமே படப்பிடிப்பு, 3 மணி நேரம் மட்டுமே நடிப்பேன் என பல கண்டிஷன்களையும் போடுகிறாராம். எனவே, நயன்தாராவை நடிக்க வைக்கவே தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்கள். ஒருபக்கம், நயன்தாராவுக்கு இப்போது மார்க்கெட்டும் இல்லை. கடந்த சில வருடங்களில் அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிதாக ஓடவில்லை.

ஆனாலும், நயன்தாரா தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. இப்போது சுந்தர்.சியின் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒரு வேடம் அம்மன் எனில், இன்னொரு வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். நயன்தாராவுக்கு ஒரு செண்டிமெண்ட் உண்டு. படங்களில் போலீஸாக நடித்தாலும் போலீஸ் உடை அணிந்து நடிக்கமாட்டார். இமைக்கா நொடிகள், நெற்றிக்கண், ஜவான் போன்ற படங்களில் அவர் போலீஸ் என்றாலும் யூனிபார்ம் அணிந்திருக்கமாட்டார்.

மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங்கில் சுந்தர்.சியிடம் நயன் இதை சொல்ல ‘ வேண்டுமானால் நீங்கள் போலீஸ் உடையில் வரும் காட்சிகளை குறைத்துக்கொள்கிறேன். ஆனால், சில காட்சிகளில் நீங்கள் போலீஸ் யூனிபார்ம் போட்டு நடித்தே ஆகவேண்டும்’ என சுந்தர்.சி சொல்லிவிட்டாராம். சுந்தர்.சியிடம் தன் பாட்சா பலிக்காது என்பதால் அவர் சொன்னபடி நடித்து வருகிறாராம்.

Next Story