லோகேஷுக்கு அல்வா!.. ரஜினி - கமல் படத்தை இயக்கும் நெல்சன்!.. இது செம டிவிஸ்ட்!..
தமிழ் சினிமாவில் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதிரடி கேங்ஸ்டர் ஆக்சன் படங்களை எடுப்பது இவரின் ஸ்டைல். கமலை வைத்து எடுத்த விக்ரம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்ததால் இவரின் இயக்கத்தில் நடிக்க ரஜினி சம்மதித்தார். ஆனால் அப்படி உருவான கூலி கலவையான விமர்சனங்களை பெற்றதோடு, ரசிகர்களையும் திருப்திபடுத்தவில்லை. அதோடு எதிர்பார்த்த வசூலையும் பெறவில்லை.
அதேநேரம் பல வருடங்களுக்கு பின் ரஜினி - கமல் இணைந்து நடிக்கவுள்ள படத்தை லோகேஷ்தான் இயக்கப் போகிறார் என்கிற செய்தி வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. ஆனால் செய்தியாளர்களிடம் இதை உறுதி செய்த ரஜினி இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை எனக் கூறி இருந்தார். அப்போதே பலருக்கும் சந்தேகம் எழுந்தது.

ஒருபக்கம் இந்த படத்திற்கான கதையை லோகேஷ் எழுதி வருவதாக கூட செய்திகள் வெளியானது. எனவே என்ன நடக்கப்போகிறது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் ரஜினி - கமல் இணைந்து நடிக்கவுள்ள படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஏனெனில், அந்த அதிர்ஷ்டம் நெல்சனுக்கு சென்று விட்டது.
கமலுடன் இணைந்து நடப்பது உறுதியானதும் லோகேஷை அழைத்து கதை கேட்டிருக்கிறார் ரஜினி. வழக்கம்போல் இரண்டு வயதான கேங்ஸ்டர்கள்.. அவர்களுக்குள் நடக்கும் சண்டை.. அதிரடி வில்லன்.. என தனது ஸ்டைலில் ரத்தம் தெறிக்கும் ஒரு கதையை சொல்லி இருக்கிறார் லோகேஷ். அது ரஜினிக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அதை அவர் லோகேஷிடம் சொல்லவில்லை. அதேநேரம் இந்த கதை வேண்டாம் என முடிவெடுத்து விட்டாராம் ரஜினி. பல வருடங்கள் கழித்து கமலோடு இணைந்து நடிக்கிறோம். எனவே இது போன்ற ஆக்சன் படம் வேண்டாம் என்பதுதான் ரஜினியின் எண்ணமாக இருக்கிறது.
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நெல்சனிடம் ‘நானும் கமலும் இணைந்து நடிப்பது போல உங்களிடம் கதை இருக்கிறதா?’ என ரஜினி கேட்க, அடுத்த நாளே ரஜினியிடம் நெல்சன் ஒரு கதையை சொல்லி இருக்கிறார். அது லோகேஷ் சொன்ன கதைக்கு நேர் மாறானது. அதில் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இல்லை. எனவே அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போனதால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.அதேநேரம் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடத்தின் இறுதி அல்லது 2017 துவக்கத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
