ரஜினி டூப்பை வச்சி இப்படி ஏமாத்திட்டியே நெல்சா!.. ஜெயிலர் 2 புரமோ வீடியோ பரிதாபம்!....

by Murugan |
jailer2
X

Jailer 2: விஜய் டிவியில் பல வருடங்கள் பல நிகழ்ச்சிகளை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். சிம்புவை வைத்து கெட்டவன் என்கிற தலைப்பில் ஒரு படத்தை இயக்கினார். ஆனால், பாதி படம் முடிந்தநிலையில் அப்படம் டிராப் ஆனது. அதன்பின் மீண்டும் விஜய் டிவிக்கு போனார். சில வருடங்கள் கழித்து லைக்கா தயாரிப்பில் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் யோகிபாபுவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அனிருத் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் அடிக்க இந்த படமும் ஹிட் அடித்தது. அதன்பின், சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். அடுத்து ரஜினியை வைத்து அவர் இயக்கிய ஜெயிலர் படம் 650 கோடிக்கும் மேல் வசூல் செய்து தமிழில் அதிக வசூலை பெற்ற படமாக மாறியது.


ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்க அனைத்து பாடல்களும் வைப் ஏத்தியது. அதிலும், ‘தலைவரு நிரந்தரம்’ பாடல் ரஜினிக்கு நூறு சதவீதம் செட் ஆனது. ரஜினிக்கு அசத்தலான பில்டப்பை இப்பாடல் கொடுத்தது. ரஜினிக்கு ஏற்றவாறு பல காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது.

இந்த படத்தில் மலையாள நடிகர் விநாயகம் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். அதோடு, காவாலா பாடலுக்கு தமன்னா போட்ட குத்தாட்டம் காஜி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதே இப்படத்திற்கு நல்ல விளம்பரமாக அமைந்தது.


இந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் இப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன் ஆகியோருக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் ஜெயிலர் 2 உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே, கடந்த பல மாதங்களாகவே இந்த படத்திற்கான கதையை எழுதி வந்தார் நெல்சன்.

இந்நிலையில்தான், இந்த படத்தின் டைட்டில் டீசர் நேற்று முன் தினம் வெளியானது. இதில், ஒரு கும்பலை ரஜினி விரட்டி விரட்டி வேட்டையாடும் காட்சிகள் அதில் இடம் பெற்று ஹைப் ஏற்றியது. அதேநேரம், கடைசியில் திரும்பி பார்ப்பது மட்டுமே ரஜினி, அதற்கு முன் காட்டப்படுவது எல்லாமே டூப்தான் என்பது தெரியவந்துள்ளது. அத காட்சிகளில் ரஜினியின் முகம் காட்டப்படாது என்பதால் டூப்பை வைத்து எடுத்திருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

Next Story