Nepolean son's marriage: கண்டம் தாண்டினாலும் பாரம்பரியத்தை விடாத நெப்போலியன்! வெளியான திருமண புகைப்படம்
Nepolean son's marriage: நடிகர் நெப்போலியனின் மூத்த மகனான தனுஷின் திருமணம் இன்று ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இந்த திருமணத்திற்கு திரையுலகை சார்ந்த பல பேர் ஜப்பானுக்கு சென்று இருக்கின்றனர். அது சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார் நெப்போலியன். முதல் படத்திலேயே தன்னுடைய முரட்டுத்தனமான வில்லத்தனத்தால் ரசிகர்களை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா போன்ற பல படங்களில் ஹீரோவாகவும் நடித்திருந்தார் நெப்போலியன்.
இவர் வில்லனாக நடித்த எஜமான் திரைப்படம் இன்று வரை ரசிகர்களின் விருப்பத்திற்குட்பட்ட படமாக இருக்கிறது. அதைப்போல ஊர் மரியாதை படத்திலும் இவருடைய நடிப்பு பெருமளவு பேசப்பட்டது. 24 வயதில் 50 வயது மதிக்கத்தக்க கதாபாத்திரத்தில் நடித்தார் நெப்போலியன். இதன் மூலம் மிகக் குறைந்த வயதில் அதிகமான வயது உடைய கதாபாத்திரத்தில் அதிக படங்களில் நடித்தது நெப்போலியன் ஆக தான் இருக்க முடியும்.
எந்த கதாபாத்திரம் ஆனாலும் அதை திறம்பட செய்து முடிப்பதில் ஒரு ஆகச்சிறந்த நடிகர். இந்த நிலையில் இவருடைய மூத்த மகன் தனுஷுக்காக சினிமா மற்றும் அரசியல் என எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். அங்கு அவருடைய பிசினஸை கவனித்து வரும் நெப்போலியன் ஏதாவது முக்கிய நிகழ்வுகள் என்றால் மட்டுமே இந்தியாவுக்கு வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய மகன் தனுஷின் திருமணம் இன்று ஜப்பானில் நடைபெற்று வருகிறது .திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த பெண்ணை தன் மருமகளாக்கி இருக்கிறார் நெப்போலியன் .தன்னுடைய மகனின் திருமணத்தை ஜப்பானில் நடக்க திட்டமிட்டதற்கு காரணம் அவருடைய மகன் தனுஷுக்கு ஜப்பான் மிகவும் பிடித்த இடமாம். அதனால் அவருடைய விருப்பப்படி ஜப்பானில் திருமணத்தை வைத்திருந்தார் நெப்போலியன்.
இந்த திருமணத்திற்கு திரையுலகை சார்ந்த பல பேர் கலந்து கொண்டிருக்கின்றனர். அது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கண்டம் விட்டு கண்டம் தாண்டினாலும் தன்னுடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மறக்காதவராக இருக்கிறார். ஜப்பானில் திருமணம் என்றாலும் தன்னுடைய ஊர் மரியாதையை காப்பாற்றி இருக்கிறார் நெப்போலியன். தமிழகத்திற்கே உரிய பண்பாடான வேட்டி சட்டை பட்டுப்புடவை இவற்றில் தான் ஒட்டுமொத்த குடும்பமும் அந்த திருமண நிகழ்வில் தோன்றியிருக்கிறார்கள். இது பார்ப்பதற்கே மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தி வருகிறது.