1. Home
  2. Cinema News

அவர் என்னத்தை சாதிச்சாரு.. எதுக்கு Y பாதுகாப்பு? விஜயை விளாசும் நெப்போலியன்

vijay
விஜயை தாக்கிய நெப்போலியன்.. சொந்த தகப்பனையே ஒதுக்குறாரு

நடிகர் என்ற இடத்தில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வருகிறார்கள். அப்படி வரும்போது என்ன சிக்கல்கள் இருக்கிறது என்பதற்கான கேள்வியை நெப்போலியனிடம் கேட்க அதற்கு நெப்போலியன் கொடுத்த பதில் இதோ. நடிகனுக்கும் அரசியல்வாதிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் நடிகரை நட்சத்திரம் என சொல்கிறார்கள் .நட்சத்திரம் எப்போதுமே தெரியாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் நட்சத்திரம் தெரியும். அந்த மாதிரி நடிகன் என்பவன் மக்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சம் விலகி தான் வாழ வேண்டும். அப்படி இருக்கும் போது தான் அந்த நடிகரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் திரையில் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆர்வம் மக்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கும்.

இதைத்தான் கிரேஸ் என சொல்வார்கள். அரசியல்வாதி எப்பொழுதுமே மக்களுடனேயே இருக்க வேண்டும். இதனால் நடிகனும் அரசியல்வாதியாக மாற வேண்டும் என்பது மதில் மேல் இருக்கும் பூனை மாதிரி. அதனால் அரசியலுக்கு என வந்து விட்டால் எல்லாவற்றையும் நாம் பழகிக் கொள்ள வேண்டும். ஆனால் நடிகனாகவே இருப்பது லைட் போட்டு போட்டு விளையாடுவது இதெல்லாம் இருக்கக் கூடாது. அடுத்து விஜய் பற்றிய கேள்விக்கும் அவர் பதில் அளித்திருக்கிறார். கூட்டம் என்பது எல்லா நடிகர் நடிகைகளுக்கும் வரத்தான் செய்யும்.

 பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் ஒவ்வொரு புது படமும் வெள்ளிக்கிழமை வாரந்தோறும் ரிலீஸ் ஆகும். வெள்ளிக்கிழமை நாயகன் என்று அவரை அப்போது கூறுவார்கள். அதைப்போல இவர் சனிக்கிழமை மட்டும் தான் வெளியே வருகிறார். இவ்வளவு சம்பாதிக்கிறேன், எல்லாத்தையும் விட்டுவிட்டு வரேன். எதுக்கு வர்றீங்க? மக்களுக்காக வர்றீங்க. அப்போ மக்களோட போயி இருங்க. கன்னியாகுமரியில் இருந்து தமிழகம் முழுவதும் நடைபயணமா வாங்க. எவ்வளவு பெரிய அரசியல் தலைவர்கள் அங்கிருந்து நடந்து வந்திருக்கிறார்கள்?

வண்டியில் வரும் பொழுது இவ்வளவு கூட்டம் இருக்கிறது. நடை பயணம் மேற்கொண்டால் அவர்களை கண்ட்ரோல் பண்ண முடியுமா என்ற கேள்வி கூட எழலாம். ஆனால் அது அவர்கள் தான் கட்டுப்படுத்த வேண்டும். அவர்களுடைய தொண்டர்களோ கட்சியை சார்ந்தவர்களோ அவர்கள் தான் அதை கட்டுப்படுத்த முடியும். இதை விஜய் தான் சொல்ல வேண்டும் .எதுக்கெடுத்தாலும் அரசாங்கத்தை நம்பிக்கொண்டு இருக்கக் கூடாது. இது அவருடைய கூட்டம். அவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த அரசியல் என்பது வேறு ஒரு களம். சினிமா கிடையாது .சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசுகிற மாதிரி இங்கேயும் வந்து பேசி விட முடியாது. அரசியலில் கொள்கை என்ன? கோட்பாடு என்ன? கட்சி என்ன? லட்சியம் என்ன?

கட்சியின் கொள்கைகளை வலியுறுத்தி ஆளும் கட்சி இப்படி செய்கிறார்கள். நான் வந்தால் இப்படி செய்வேன் அதைப்பற்றி தான் பேச வேண்டுமே தவிர சும்மா வந்து கிண்டல் செய்து கொண்டு அந்த தலைமை பொறுப்பிற்கு ஒரு மதிப்பு இருக்கு. மரியாதை இருக்கு .முதலமைச்சர் என்பது ஒரு உயர்ந்த பதவி. அந்த உயர்ந்த பதவியை கிண்டலாக பேசுவது ஏளனமாக பேசுவது இப்படி எல்லாம் செய்வது தவறு .ஏனெனில் நீங்கள்தான் அந்த பதவிக்கு ஆசைப்படுகிறீர்கள் .அந்த பதவிக்கு ஆசைப்படுகிற நீங்கள் முதலில் அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் .பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற ஒரு வார்த்தையை சொன்னால் மட்டும் போதுமா?

நிறைய விஷயங்களை அவர் கற்றுக் கொண்டு இறங்க வேண்டும். அவருடைய சுபாவம் என்ன என்பது திரைத்துறையில் எல்லோருக்கும் தெரியும் .யாரிடமும் இறங்கி பழக மாட்டார். எனக்கும் அவருக்கும் நிறைய சங்கடங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அதனால் இந்த நேரத்தில் அவரை நான் தாக்கி பேசுகிறேன் என நினைக்க வேண்டாம். ஸ்பாட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதை தான் நாம் கவனிக்க வேண்டும். கரூரில் அவ்வளவு ஒரு பெரிய சம்பவம் நடந்திருக்கிறது .அந்த நேரத்தில் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? என்ன பிரச்சனை? யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? ஏதேனும் உயிருக்கு ஆபத்து வந்திருக்கிறதா என்பதை அவர் உடனே களத்தில் இறங்கி ஆராய்ந்து இருக்க வேண்டும் .

அதை விட்டுவிட்டு எனக்கு பிரச்சனையாகி விடும். நான் வந்தால் இன்னும் நிலைமை மோசமாகிவிடும் என்று போனது சரியாக படவில்லை. உங்களை சுற்றி அத்தனை பவுன்சர்கள் இருக்கிறார்கள். அவர் என்ன அப்படி சாதிச்சாரு? எந்த தகுதியில் அவருக்கு y பாதுகாப்பு எல்லாம் கொடுத்து இருக்கிறார்கள்? பெரிய பெரிய உயர்ந்த பதவியில் இருக்கிறவர்களுக்குத்தான் அந்த மாதிரி பாதுகாப்பு கொடுப்பார்கள்.மேலும் அவருடைய சுபாவம் யாருடனும் பேச மாட்டார். சொந்த அப்பா அம்மாவையே ஒதுக்கி வைத்திருக்கிறார். மனைவி குழந்தைகள் என எல்லாரையும் ஒதுக்கி வைத்ததாக சொல்றாங்க. இப்படி இருக்கிறவர் எப்படி நல்ல தலைவனாக முடியும் என மக்கள் கேட்க மாட்டார்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறார் நெப்போலியன்.