நேசிப்பாயா படத்தை ரிலீஸ் பன்றது இந்த நிறுவனமா?.. புளியங்கொம்பா தான் புடிச்சிருக்காங்க..

by Ramya |
nesippaya
X

nesippaya 

நேசிப்பாயா: தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருந்தவர் இயக்குனர் விஷ்ணுவரதன். அதிலும் அஜித்தை வைத்து இவர் இயக்கிய பில்லா, ஆரம்பம் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வளம் வந்த விஷ்ணுவரதன் பாலிவுட்டுக்கு சென்றார். அங்கு ஷெர்ஷா என்கின்ற திரைப்படத்தை இயக்கினார்.

இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதனால் பேன் இந்தியா அளவில் பிரபலமாகி இருக்கின்றார் இயக்குனர் விஷ்ணுவரதன். இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். நேசிப்பாயா என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி ஹீரோவாக நடித்திருக்கின்றார்.


மேலும் அவருடன் இணைந்து நடிகை அதிதி சங்கர், குஷ்பூ, சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ்-ஆக இருக்கின்றது. படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் படக்குழுவினர் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இறங்கி இருக்கிறார்கள்.

தொடர்ந்து பல youtube சேனல்களுக்கு படக்குழுவினர் பேட்டி கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் தான் இப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியிருந்தார். இந்த ஆண்டு பொங்கலுக்கு விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகாத காரணத்தால் ஏகப்பட்ட திரைப்படங்கள் போட்டி போட்டுக் கொண்டு ரிலீஸில் இறங்கி இருக்கின்றது.

இதில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்ச் திரைப்படம் மட்டுமே மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். அதனை தொடர்ந்து வெளியாகும் மற்ற படங்கள் அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள் தான். வணங்கான் தொடங்கி நேசிப்பாயா வரை கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

இதில் நேசிப்பாயா படத்தை எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியிட்டு உரிமையை ரோமியோ பிரின்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கின்றது. இந்த நிறுவனம் ஏற்கனவே பல சூப்பர் ஹிட் படங்களை வெளியிட்டு இருக்கின்றது.


சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் கோட் திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்திருந்தது. அதனை தொடர்ந்து அடுத்து வரவிருக்கும் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தையும் இந்த நிறுவனம்தான் வெளியிட இருக்கின்றது. இந்த நிறுவனம் தற்போது நேசிப்பாயா திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருப்பதால் நிச்சயம் அதிக திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story