பச்சைக்கிளி முத்துச்சரம் வாடை வருது பாய்!.. த்ரிஷாவின் சுகர் பேபி பாட்டு வொர்த்தா? வெத்தா?

by SARANYA |
பச்சைக்கிளி முத்துச்சரம் வாடை வருது பாய்!.. த்ரிஷாவின் சுகர் பேபி பாட்டு வொர்த்தா? வெத்தா?
X

தக் லைப் படக்குழு மும்பையில் நடந்த ப்ரொமோஷன் விழாவில் பிஸியாக இருந்து வரும் நிலையில் இன்று செகண்ட் சிங்கிளான சுகர் பேபி பாடலை வெளியிட்டுள்ளனர். பச்சைக்கிளி முத்துச்சரத்தில் இடம்பெற்றுள்ள ஜோதிகாவின் ”உனக்குள் நானே” பாடலைப்போல இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்ற படம் தான் தக் லைஃப். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு தமிழ் கேங்ஸ்டர் ஆக்ஷன் டிராமாவாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும், இப்படத்தில் சிலம்பரசன், த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, நாசர், அலி ஃபாசல், பங்கஜ் திரிபாதி, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தக் லைஃப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல் பாடலான “ஜிங்குச்சா” வெளியாகியதை தொடர்ந்து இன்று மாலை செகண்ட் சிங்கிளாக சுகர் பேபி பாடலை வெளியிட்டுள்ளனர். இது 1987-ல் வெளியான நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமாகும். இப்படம் கமல்ஹாசனின் 234-வது திரைப்படமாக வெளியாகவுள்ளது.


படத்தின் டிஜிட்டல் உரிமம் 149.7 கோடி ரூபாய் அளவில் நெட்ஃப்ளிக்ஸுக்கு விற்கப்பட்டதாகவும், தெலுங்கு விநியோக உரிமை 20 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மற்ற படங்கள் 4 வாரங்களில் ஒடிடி தளத்தில் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் தக் லைப் படத்தை 8 வாரங்களுக்கு பிறகு வெளியிடுமாறு கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வருகிற ஜூன் 5ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் தக் லைஃப் திரைப்படம் வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் “இந்தியன் 2” படத்தின் தோல்விக்குப் பிறகு, இப்படம் அவருக்கு மீண்டும் வெற்றியைத் தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மே 24ம் தேதி தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

சுகர் பேபி பாடலில் த்ரிஷா தொப்புள் வரை காட்டி ”என்ன வேணும் உனக்கு.. கொட்டிக் கொட்டி கிடக்கு” என்று பாடினாலும் ”உனக்குள் நானே உருகும் இரவில்” என கெளதம் மேனன் இயக்கத்தில் சரத்குமாரின் சுகர் பேபியாக ஜோதிகா மாறி நடனமாடியது தான் ரசிகர்களுக்கு நினைவிக்கு வருகிறதாம். ஓடாத இந்தியன் 2 படத்தில் இடம்பெற்ற காலண்டர் கேர்ள்ஸ் பாடலையே அனிருத் இதை விட சிறப்பாக இசையமைத்திருந்தார் என்றும் ஏ.ஆர். ரஹ்மான் பாடல் போலவே இல்லை என்றும் விமர்சனங்கள் குவிகின்றன.

Next Story