விஜய் பீனிக்ஸ் படத்துக்கு வாழ்த்து சொன்னதுக்கும் திரிஷாவுக்கும் என்ன சம்பந்தம்?!.. ஆரம்பிச்சாட்டாங்களே!...

Vijay Trisha: நடிகர் விஜயை திரிஷாவுடன் இணைத்து செய்திகள் வெளியாகி வருவது வாடிக்கையாகிவிட்டது. விஜய் திரிஷா இருவரும் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
ஆனால், விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டு எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார். ஆனால், கடந்த சில வருடங்களாகவே விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் தனியாகவே வசித்து வருகிறார். அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் லண்டனில் வசித்து வருகிறார்கள். அதாவது விஜயும், அவரின் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
அதற்கான காரணம் என்னவென யாருக்கும் தெரியவில்லை. இதுபற்றி விஜயோ, சங்கீதாவோ எங்கும் பேசுவது இல்லை. விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா தயாரிப்பில் படம் இயக்குகிறார் என செய்தி வெளியான போதும் விஜய் ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை. அதை அவர் கண்டுகொள்ளவும் இல்லை.

அதோடு, திரிஷாவுடன் நெருக்கம் காட்டினார். இருவரும் அடிக்கடி வெளியே சுற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும். அதை பற்றியும் விஜய் கவலைப்படுவது இல்லை. ஒவ்வொருமுறையும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்போதும் அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களையே திரிஷா பகிர்கிறார்.
சமீபத்தில் கூட திரிஷாவின் நாயை விஜய் தூக்கி கொஞ்சும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை திரிஷா பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இதை பலரும் ட்ரோல் செய்ததால் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் கோபத்தை காட்டி ஸ்டேட்டஸ் போட்டார். இந்நிலையில்தான், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள பீனிக்ஸ் படத்திற்காக விஜய் அவரை நேரில் அழைத்து வாழ்த்து கூறினார். இது தொடர்பான புகைப்படத்தை சூர்யா தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து நன்றி சொன்னார்.

இதைத்தொடர்ந்து, திரிஷாவுடன் விஜய் இருந்த போது அணிந்திருந்த ஷூவைத்தான், சூர்யாவுக்கு வாழ்த்து சொன்னபோதும் விஜய் அணிந்திருந்தார் என சொல்லி ஆதாரத்தோடு புகைப்படத்தை பகிர்ந்து விஜயை பிடிக்காதவர்கள் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள்.