Arasan: அதே டெய்லர்.. அதே வாடகை!.. இது அதுல்ல!.. ட்ரோலில் சிக்கிய அரசன் போஸ்டர்!..

கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உருவாகி வரும் திரைப்படம்தான் அரசன். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்குள் பல பஞ்சாயத்துக்கள் வந்தது. பொதுவாகவே சிம்பு படம் என்றாலே பல சிக்கல்கள் வரும். பெரும்பாலும் சிம்புவால்தான் சிக்கலே வரும். எதாவது ஒருவகையில் இயக்குனருக்கோ அல்லது தயாரிப்பாளருக்கோ தலைவலியை கொடுப்பார். பேசிய சம்பளத்தில் இருந்து திடீரென சம்பளத்தை அதிகமாக கேட்பார். அரசன் படத்திலும் சிம்பு அதையே செய்ய தாணு கடுப்பாகி படத்தை நிறுத்திவிட்டார்.
அதனால்தான் சிம்புவை வைத்து வெற்றிமாறன் எடுத்த புரமோ வீடியோ கூட வெளியாகாமல் இருந்தது. அதன்பின் வெற்றிமாறன் களமிறங்கி தாணு, சிம்பு ஆகியோரிடம் பேசி இந்த பிரச்சினையை சுமூகமாக முடித்து வைத்தார். அதனால்தான் தற்போது அரசன் படத்தின் வேலைகள் மீண்டும் துவங்கியிருக்கிறது.
அரசன் படத்தின் புரோமோ வீடியோவை இன்று மாலை 6.02 மணிக்கு தியேட்டர்களிலும், நாளை காலை 10.07 மணிக்கு யுடியூப்பிலும் வெளியிடுகிறார்கள். இந்த புரமோ வீடியோவை பார்க்க சிம்பு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அரசன் படத்தின் ஒரு புதிய போஸ்டரை கலைப்புலி தாணு இன்று காலை வெளியிட்டுருந்தார்.
சிம்புவின் முகமெல்லாம் ரத்தம் வலிவது போல அந்த போஸ்டர் டிசைன் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து வெற்றிமாறன் ஏற்கனவே இயக்கிய அசுரன் படத்திலும் படத்தில் தனுஷ் தனது முகம் முழுக்க ரத்தம் வடியும் படி ஒரு காட்சியில் நடித்திருப்பார். அந்த போஸ்டரை எடுத்து போட்டு அதுபோலவே அரசன் பட போஸ்டரையும் வடிவமைத்துள்ளனர் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.