Dude: படம் ஃபுல்லா தாலிய அறுக்குறோம்!.. இதுதான் கதை!.. ட்ரோலில் சிக்கிய டியூட்!

பிரதீப் ரங்கநாதன் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் டியூட். சுதாகொங்கராவிடம் சினிமா கற்ற கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மமீதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த கால இளசுகள் காதல் மற்றும் பிரேக்கப்பை எப்படி ஹேண்டில் செய்கிறார்கள்... ஒரு பெண் இல்லையென்றால் இன்னொரு பெண் என எப்படி மனம் மாறுகிறார்கள்.. என்கிற பல விஷயங்களை இந்த படத்தில் பேசியிருக்கிறார்கள். எனவே இந்த படம் இளைஞர்களை கவர்ந்திருக்கிறது. கடந்த ஆறு நாட்களில் இப்படம் 100 கோடி வசூலை தாண்டிவிட்டது.
அதேநேரம் இந்த படம் இளசுகளுக்கு பிடித்தாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு படம் பிடிக்கவில்லை. அதற்கு காரணம் முற்போக்கு என்கிற பெயரில் பல வருடமாக பின்பற்றி வந்த நம்பிக்கைகள், கலாச்சாரத்தை அடித்து நொறுக்குவது போல பல காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கிறது. குறிப்பாக இந்த படத்தின் முதல் காட்சிகளிலேயே தன்னை காதலித்து விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணின் தாலியைப் போய் அறுக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இடைவேளை காட்சியில் அவரின் காதலிக்கு தாலியை கட்டுகிறார். படத்தின் இறுதி காட்சியில் அவரின் மனைவியை அவரின் காதலனோடு சேர்த்து வைக்க அவர் கட்டிய தாலியை அவரே அறுக்கிறார்.. இப்படியெல்லாம் படத்தில் காட்சிகள் வருகிறது.
இதனால்தான் 40-50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டியூட் படம் பிடிக்கவில்லை. இந்த படம் ஒரு கலாச்சார சீர்கேடு.. எதை வேண்டுமானாலும் படமாக எடுக்கலாமா?.. என அவர்கள் பொங்கி வருகிறார்கள். இந்நிலையில் ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் கீர்த்தீஸ்வரன் பிரதீப்புக்கு கதையை சொன்னபோது ‘முதல் காட்சியில் உங்க எக்ஸ் கல்யாணத்துக்கு போய் அவ தாலிய அறுக்குறீங்க சார்.. இடைவேளை காட்சியில் உங்க காதலி கழுத்துல தாலியை கட்டுறீங்க.. கிளைமாக்ஸ்ல உங்க பொண்டாட்டியை அவ லவ்வரோட சேர்த்து வைக்க நீங்க கட்டுன தாலிய நீங்களே அறுக்குறீங்க.. மொத்தத்துல படம் பார்க்க வந்தவங்க எல்லா தாலியையும் அறுக்குறோம் சார்’ என சொல்லியிருப்பார் போல’ என பதிவிட்டு கலாய்த்திருக்கிறார்.